’’நான் சினிமாவுல, இன்னும் முளைச்சி மூனு இலை விடல. அதுக்குள்ள என்ன ரவுண்டுகட்டி பீதியைக் கிளப்புறாங்களே அவ்வ்வ் ‘’ என்று வடிவேலு மாதிரியே அழுதுகாட்டுகிறார், ‘மெரினா’ வழியாக கரையேறி ‘மனம் கொத்திப்பறவை’யில் ஒரு றெக்கையைப் பறிகொடுத்த சிவகார்த்திகேயன்.
சினிமாவுக்குள் நுழைந்து சில தினங்களே ஆகியிருக்கும் நிலையில், அதற்குள் ரசிகர் மன்றம் ஆரம்பித்திருப்பதாகவும், தனது ரேஞ்ச் தெரியாமல் தயாரிப்பாளர்களிடம் தாறுமாறாக 70, 80லட்சங்கள் சம்பளம் கேட்பதாகவும் சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டுகள்.
‘’இப்போதைக்கு நான் தனுஷ் சார் தயாரிப்புல ‘எதிர்நீச்சல்’ படத்துலயும், பழையபடி பாண்டிராஜ் சார் டைரக்ஷன்லயும் நடிக்க மட்டும்தான் கமிட் ஆகியிருக்கேன். எனக்கு எவ்வளவு சம்பளம் குடுக்கனும்னு அவங்களுக்கு தோணுதோ அதைக்குடுக்கப்போறாங்க. என்னோட சம்பளம் இவ்வளவுன்னு டிமாண்ட் பண்ற அளவுக்கு நான் வளரலைன்னு எனக்குத்தெரியாதா? என்னொட கேரியர் நலம் கருதி, புடிக்காத சில கதைகளை ரிஜக்ட் பண்ணியிருக்கேன். அவங்கதான் நான் 70 லட்சம், 80 லட்சம் சம்பளம் கேக்குறதா வெளிய கிளப்பிவிடுறாங்கன்னு நினைக்கிறேன்.
அடுத்ததா ரசிகர் மன்றம் மேட்டர். நான் எவ்வளவோ சொல்லியும் கேக்காம என்னோட காரைக்கால் நண்பர்கள் எனக்கு ஒரு மன்றம் ஆரம்பிச்சிட்டாய்ங்க. சரி அவசரப்பட்டு, நாம பெருசா ஜெயிக்கிறதுக்கு முந்தி வச்சிட்டாங்க. அந்த மன்றம் ஆரம்பிச்சதை நியாயப்படுத்துறதுக்காகவாவது பெருசா வளர்ந்து காட்டனும்னு ஆசை வந்துருக்கு.
இதுக்கு நடுவுல சிவகார்த்திகேயனைப் பத்தி கிசுகிசு எழுதுறேங்கிற பேர்ல, வளர்ற செடியில வெந்நீர் ஊத்தாதீங்க ப்ரதர்ஸ்’’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் எதிர்நீச்சல் போடகிளம்பும் சிவகார்த்திகேயன்.