’அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்திலிருந்து பாரதிராஜா தன்னைத்தூக்கியதிலிருந்தே இனியாவுக்கு தமிழ்சினிமா லேசாகக் கசக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ்சினிமா டைரக்டர்கள் யார் எப்படிப்பட்ட கதை சொன்னாலும் குறை கூறிக்கொண்டே இருந்தவர் கடைசியாய் கரையேறி நடிக்க ஒத்துக்கொண்ட ஒரே படம் தங்கர் பச்சானின்,’ அம்மாவின் கைபேசி’
மலையாள இயக்குனர்களிடம் தான் கேட்கிற அளவுக்கு நல்ல கதைகள், தமிழ்ப்பட இயக்குனர்களிடமிருந்து வருவதில்லை என்று கூறும் இனியா, எவ்வளவு பெரிய சம்பளத்துக்காகவும் தான் கிளாமர் ரோல் ஏற்று நடிக்கப்போவதில்லை என்கிறார்.
தற்போது நெய்வேலியில் நடக்கும் ‘அம்மாவின் கைபேசியில் நடித்துக்கொண்டிருக்கும் இனியா, படப்பிடிப்பு சமயங்களில் தங்கர் தரும் டார்ச்சர் தாங்கமல் வருகிற போகிறவ்ர்களிடமெல்லாம் வாய்விட்டு அழுகிறாராம்.
‘’இதுக்கு முந்தி பிரபுதேவாவை வச்சி நான் இயக்குன ‘களவாடிய பொழுதுகள்’ எப்பொழுது தியேட்டருக்கு வரும்னு கூட தெரியாம தவிச்சிட்டிருக்கேன்.’ அம்மாவின் கைபேசியை’ திரைப்பட விழாக்கள்ல திரையிடுறதுக்கும், உனக்கு தேசிய விருது வாங்கிக் குடுக்கனும்கிறதுக்காக மட்டுமே எடுக்கிறேன்னு சொல்லி, அடிமாட்டு சம்பளம் பேசினார். சம்பளம் ஒ.கே ஆனா அதுக்காக ஒரு நடிகையைக்கூடவா அடிமாடு மாதிரி நடத்துவாங்க ? தங்கர் பச்சான்னு பேரு வக்கிறதுக்குப்பதிலா அவருக்கு டார்ச்சர் பச்சான்னு பேரு வச்சிருக்கலாம்’’ என்று அலுத்துக்கொள்கிறார் இனியா.
இப்படி கசப்பான அனுபவங்கள் தொடர்வதால், மெல்ல தமிழை இனி ஏறக்கட்டிவிட்டிவிட்டு, முழுநேர மலையாள நடிகையாகிவிட முடிவெடுத்திருக்கும், இனியாவின் கைவசம் இப்போதைக்கு ,இயக்குனர் உம்மர் மொஹம்மதுவின்,’ ரேடியோ’ மட்டும் படப்பிடிப்புக்கு கிளம்பும் நிலையில் தயாராக இருக்கிறதாம்.
ஒருவேளை அந்த ‘ரேடியோ’ சரியா ஓடாம ரிப்பேராகிபோச்சின்னா, ரிப்பேர் பாக்க கோடம்பாக்கம் வருவீங்கள்ல அப்ப நாங்க உங்கள வச்சிக்கிறோம்.