தமிழ்சினிமாவின் வாய்க்கொழுப்பு நம்பர் ஒன் தங்கர் பச்சான் தற்போது’ ’அம்மாவின் கைபேசி’ என்ற பெயரில் உலகத்தரம் வாய்ந்த ஒரு பப்படத்தை எடுத்து வருகிறார். இந்தப்படத்துக்கு இசையமைப்பவர் ரோகித் குல்கர்ணி என்ற மும்பைக்காரர்.
நடுவில் ஒரு சின்ன ப்ளாஷ்பேக். இந்தப்படம் துவங்குவதற்கு சில தினங்கள் முன்பு, இசைஞானியை சந்திக்கச்சென்ற பச்சான் , ஐயா தர்மம் போடுங்க ஸ்டைலில் ‘அம்மாவின் கைபேசி’ படத்தை தயாரிக்க யாருமே முன்வராததுனால நானே தயாரிக்கிறதா இருக்கேன். நீங்க மியூசிக் சைடுல எனக்கு செலவு எதுவும் வைக்காம உதவி பண்ணுனா நல்லாருக்கும்’ என்று தலையை சொறிந்திருக்கிறார்.
அதற்கு ராஜாவோ, இப்பிடியே பஞ்சப்பாட்டு பாடியே நீயும் ஏழெட்டு பங்களா வாங்கிப்போட்டுட்ட ஏழைப்பங்காளன் தான?’’ என்று நக்கலடித்திருக்கிறார்.
சரி நம்ம ஆக்டிங் இனி இவர் கிட்ட எடுபடாது என்று தெரிந்துகொண்ட பச்சான், மும்பை மச்சானைத்தேடிப்போன கதை இதுதான்.
சரி மேட்டருக்கு வருவோம். தனது அம்மாவின் கைபேசி’ படத்தைப்பற்றி கதை விடுவதற்காக இன்று காலை ஒரு சில பத்திரிகையாளர்களை மட்டும் தனது அலுவலகத்தில் சந்தித்த பச்சான், ‘’ என்னோட படங்கள் எல்லாமே சர்வதேச தரத்துல உள்ளதுதான். ஆனா அது சர்வதேச அளவுல போய்ச்சேராம இருந்ததுக்கு இரண்டு தடைகள் இருந்துச்சி. முதல் தடை நான் படத்துல வச்சிருந்த பாட்டு மாதிரியான சில கமர்ஷியல் அயிட்டங்கள். இரண்டாவது தடை என் படத்து அமைஞ்ச இசை. ஆனா இந்தப்படத்துல ரோகித் குல்கர்ணி உலகத்தரத்துல இசையமைச்சிருக்கார். அதனால இந்தப்படம் தங்கர் பச்சானை சர்வதேச லெவல்ல கொண்டுபோய்ச்சேர்க்கும்’’
கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி இவ்வாறு பேசினார் தங்கர்.
இவர் டைரக்டரா அறிமுகமான’அழகி’ யில ராஜா இசை இல்லைன்னா அது கிழவின்னு இவரை அப்பவே தமிழ்சினிமாவுல ஊருக்கு பேக்கப் பண்ணி, பலாப்பழ தோப்புல பன்னி மேய்க்க அனுப்பியிருப்பாய்ங்க. வந்துட்டாரு கருத்து கந்தசாமி.