ரஜினி படத்தை போல பிரம்மாண்டமாக புதுமுக நாயகன் ஜீவா நடிக்கும் ஆரம்பமே அட்டகாசம் படத்தின் அறிமுக விழா M.I.T கல்லூரி வளாகத்தில் நடந்தது. ஆயிரகணக்கானோர் கலந்து கொன்டனர். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவாவும் அவருக்கு ஜோடியாகசங்கீதாபட்டும் நடிக்கிறார்கள். மேலும் பாண்டியராஜன், ஞான சம்பந்தம், வையாபுரி, சாம்ஸ், ஶ்ரீநாத், ஆகியோரும் நடிக்கிறார்கள். சுவாதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இயக்குனர் ரங்கா.
இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்தில் வரும் ஆரம்பமே அட்டகாசம் எனும் தலைப்பு பாடலை இயக்குனர் திரு.கே.பாக்யராஜ் அவர்கள் வெளியிடபாண்டியராஜன் பெற்று கொன்டார்.
திரு.பாக்யராஜ் பேசுகையில் படத்தை தான் பார்த்து ரசித்ததாகவும், குறிப்பாக படத்தில் ஜீவாவின் லிப்லாக் காட்சியை மிகவும் ரசித்ததாக கூற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. ஜீவா மற்றும் படகுழுவினர்க்கு இப்படம் ஆரம்பமே அட்டகாசமாக அமைய தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
படத்தின் புகைப்படங்களையும், டீஸர்களையும் பார்த்தால் சராசரிப் படமோ என்று சந்தேகம் வரும்படி இருக்கிறது. இன்னும் தரமாக படம் எடுத்து பெயர் வாங்குவாரா இயக்குனர் ரங்கா ? பார்ப்போம்.