ஒரு ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த ஆறே மாதத்தில் அதே ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைத்தால், நடிகைகள் எப்படி ஆத்திரப்படவேண்டும்?

‘’ஆனா கதை நல்லா இருந்தா அம்மாவா என்ன, பாட்டியா கூட நடிக்க நான் ரெடி’’ என்கிறார் ஸ்வேதா மேனன். பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா/?

சமீபத்தில் வெளிவந்த வசந்தபாலனின்’ அர்வானில்’ கிளுகிளு கேரக்டர் ஒன்றில் நடித்தாரே அதே ஆண்ட்டி தான்.

இந்தியிலும் மலையாளத்திலும் மற்ற நடிகைகள் நடிக்கத்துணியாத சில கேரக்டர்களில் நடித்தே பேர் வாங்கிய ஸ்வேதா கடந்த ஆண்டு மோகன்லாலின் ஜோடியாக, ‘சால்ட் அண்ட் பெப்பர்’ என்ற படத்தில் நடித்தார். அந்த காம்பினேசன் பெரும் வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் மோகன்லாலுடன் ஸ்வேதா மேனன் ‘மழியூரி’ என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்.

ஆனால் இந்த முறை ஜோடியாக அல்ல. மோகன்லாலின் அம்மாவாக. தமிழில் சில இயக்குனர்களின் டங்குவாரை அத்துவிட்டு, இப்போது கேரளாவில் முழுநேர டேரா அடித்திருக்கும் நம்ம செயமோகன் இப்படத்துக்கு கதை விசனம் எழுத, மதுபால் படத்தை இயக்குகிறார்.

மோகன்லாலுக்கு அம்மாவாக நடிப்பது குறித்து ஸ்வேதாவிடம் கேட்டால்,’ சால்ட் அண்ட் பெப்பரில்’ மோகன்லாலின் ஜோடியாக நடித்த போதே, காதல் கலந்த ஒரு தாய்மை என்னிடம் இருந்ததாலோ என்னவோ என்னை அடுத்த படத்துக்கு அவரது தாயாகவே ஆக்கிவிட்டார்கள். யார் கண்டது, இதற்கடுத்த மோகன்லாலின் படத்தில் அவரது மகளாகவோ, அல்லது பாட்டியாகவோ நடிக்கச்சொன்னாலும் சொல்வார்கள்.அவ்வளவுக்கும் நான் ரெடிதான்’என்கிறார் ஸ்வேதா.

நம்ம அஜீத்துக்கோ, விஜய்க்கோ ஜோடியா நடிக்கிற நயன், த்ரிஷாக்களை அம்மா வேடத்துல நடிக்கச்சொல்ற தைரியம் நம்ம டைரக்டருங்களுக்கு இருக்கா? கம் ஆன் ஸ்டார்ட் மியூஸிக்..

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.