’’அவளைப் போல்அவுத்துப் போட்டுக் கொண்டு ஆட என்னால் முடியாது’’- ‘பாவ’னா

bavana-hindi-1

தமிழில் சுத்தமாக படமே கிடையாது. மலையாளத்திலும் ,கன்னடத்திலும்பேருக்கு தலா ஒரு சித்திரம். அதுவும் கம்மி சம்பளத்தில். இதுதான் பாவனாவின் லேட்டஸ்ட்நிலவரம்.

சேச்சிக்கு என்ன ஆச்சி ? என்று துக்கமாக விசாரித்தால்,’’

சீச்சி.. கரைய வேண்டாம். எனக்கு எப்பவும் போல செம டிமாண்ட் இருக்கு. இப்ப கொஞ்சம் முன்னால கூடஒரு இந்திப்படத்துல நடிக்கச்சொல்லி கதை சொன்னாங்க. கதையக்கேட்டுட்டு, நான் தான் நடிக்கமுடியாதுன்னு மறுத்துட்டேன்’’ என்று பெரிய பில்ட்-அப் கொடுக்கிறார் பாவனா.

‘எல்லா நடிகைகளுமே எப்படா இந்திப்பட சான்ஸ் கிடைக்கும்னு காத்திட்டிருக்கப்ப,வந்த வாய்ப்பை நான் வேணாம்னு சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாத்தான் இருக்கும். இம்ராம் ஹஸ்மிதான் எனக்கு கதை சொல்ல வந்த இந்திப்படத்தோட ஹீரோன்ன உடனே நானும் ஆர்வமா உட்கார்ந்துதான்கதை கேட்டேன். ஆனா கதையில 5 நிமிஷத்துக்கொரு தடவை லிப் டு லிப் கிஸ்ஸிங் சீன்.அடுத்துநிறைய எக்ஸ்போஸிங்னு எனக்கு உடன்பாடில்லாத சமாச்சாரங்கள் நிறைய இருந்துச்சி. அதனால கொஞ்சம் கூட யோசிக்காம உடனே நோ சொல்லிட்டேன்.

இந்திப்படம் வருதுங்கிறதுக்காகவோ, பெரிய சம்பளம் வருதுங்கிறதுக்காகவோநான் கிளாமர் பண்ணனும்னு நினச்சிருந்தா நான் எப்பவோ பெரிய ஸ்டார் ஆயிருப்பேன்.

எல்லாரும் அந்த ‘பால்’காரி நடிகையை பத்தியே பேசிப்பேசி என்னை உசுப்பேத்துறாங்க. அவள மாதிரில்லாம் மானங்கெட்டுப்போய் என்னால அவுத்துப்போட்டு ஆட முடியாது’ கொஞ்சமும் யோசிக்காமல் விளாசுகிறார் பாவனா.
bavana2bavana3

bavana4