டேய் உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையாடா/?’ ’நம்மைப்பார்த்து கேட்கும் நடிகை

dhanya-insult-1

தமிழர்களின் வீரத்தை உலகுக்கு உணர்த்த ஏ.ஆர். முருகதாஸ் எடுத்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் ஒரு சிறு வேடத்திலும், ’காதலில் சொதப்புவது எப்படி’? படத்தில் அமலா பாலின் நெருங்கிய தோழியாகவும் நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா.

கா.சொ.எப்படி? க்குப்பிறகு இவருக்கு இரண்டாவது கதாநாயகி ரேஞ்சில் சில கேரக்டர்கள் கிடைத்திருப்பதால், தொடர்ந்து தமிழ்ப் படங்களில் கதாநாயகியாகி, தமிழர்களின் இதயங்களையும் சில கோடிகளையும் கொள்ளையடிப்பது என்ற திட்டத்துடன் அம்மணி

செட்டிலாயிருந்தது சென்னையில்தான்.

தமிழர்களை மட்டும் போடா வெண்ணை என்று விரட்டியடிக்கும் சென்னை, எப்போதுமே வந்தாரை வாழவைக்கத் தவறியதில்லை தன்யா பாலகிருஷ்ணா உட்பட.

ஆனால் இரு தினங்களுக்கு முன்பு துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று சென்னையை விட்டு தனது சொந்த ஊரான பேங்களூருவுக்கு ஓடிப்போய்விட்டார் தன்யா.

காரணம் ஃபேஸ்புக்கில் அவருக்கு வந்த கண்டனங்களும் மிரட்டல்களும்..நடந்தது என்ன?

இறுதிச்சுற்றில் நுழையும் வாய்ப்புக்காக சென்னை- பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டிருந்த தினத்தன்று, தனது மொழிdhanya-insult-1 வெறியை வெளியே கக்கும் விதமாக ‘’ டேய் பிச்சைக்கார தமிழ்ப்பசங்களா, எதெதுலடா பிச்சை எடுப்பீங்க? தண்ணி பிச்சை கேட்டீங்க போட்டோம். கரண்ட் பிச்சை கேட்டீங்க போட்டோம். எங்க அழகான பெங்களூரு சிட்டிக்கு குடியேறி கொச்சப்படுத்துறீங்க. போனாப்போகுதுன்னு விட்டுடுறோம் இப்ப கிரிக்கெட்லயுமா ?நாங்க பிச்சை போட்டாத்தான நீங்க ஃபைனலுக்கே போகமுடியும்? டேய் உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையாடா ?’’

என்கிற ரீதியில் பின்விளைவுகள் குறித்து சற்றும் யோசிக்காமல் தனது ஃபேஸ்புக்கில் தன்யா தொடர்ந்து கமெண்டுகள் போட்டுக்கொண்டேயிருக்க, அதைப்படித்து கொதித்த தமிழ் உணர்வாளர்கள் சிலர் எச்சரிக்க, கடைசியில் பணிந்து தனது கமெண்டுகளை வாபஸ் வாங்கி, மன்னிப்புக்கேட்டு பெங்களூரு பறந்தது கன்னடத்து கண்றாவிக்கிளி.

அடக்கம் சென்னையில் உய்க்கும். அடங்காமை சொந்த ஊருக்கு விரட்டப்படும்னு வள்ளுவரு சும்மாவா சொல்லிவச்சாரு ?

dhanya-insult-1