’மூன்று கெட்டப்பு, ஒரு மொட்டப்பு’- ஷாம் ஷேம் பப்பி ஷேம்

shaam-shame1

ஏற்கனவே’3’ என்ற பெயரில் படம் எடுத்தவர்கள், சிக்கிச் சிதறி, முக்கி முணகிக்கொண்டிருக்கும் வேளையில்,’6’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு வரும் படத்தில் முழு நீள நிர்வாண வேடத்தில் நடித்து அனைவரையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்க இருக்கிறார், ’12-பி’ பஸ்ஸோடு சேர்ந்து தொலைந்துபோன நடிகர் ஷாம்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகி வரும் இந்தப்

படத்தில் ஷாம் நான்கு கெட்-அப்புகளில் [அந்த நான்கில் ஒன்றுதான் மொட்டப்பா?] நடித்து வருவதால், சுமார் ஒரு வருடமாகியும்,இதன் படப்பிடிப்பு முடியவில்லை.

‘’நீண்ட இடைவேளைக்குப்பின், நான் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்துக்கொண்டிருக்கும் படம் இது. நண்பர்களுடன் ஏரியில் குளிக்கும்போது, காமெடிக்காக நான் நிர்வாணமாக நடிக்க வேண்டிய காட்சி ஒன்று வந்தது. மாடலிங்கில் ஈடுபட்டபோது, நான் பலமுறை ஜட்டியோடு போஸ் கொடுத்திருக்கிறேன் என்றபோதும், நிர்வாணமாக நடிக்க எனக்கு பயங்கர கூச்சமாக இருந்தது.ஆனால் நண்பர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே, ஒரு வழியாக முழு நிர்வாண கோலத்தில் நடித்து முடித்தேன். நல்லவேளை அந்தக் காட்சி எடுக்கும்போது யூனிட்டில் பெண்கள் யாரும் இல்லை.’’

வருங்காலத்தில் படம் பார்க்கப்போகிறவர்கள் விடவேண்டிய பெருமூச்சை இப்போதைக்கு ஷாம் விடுகிறார்.

shaam-shame2