ஆத்தா உன் கோயிலிலே -’ஹன்ஷிகாவுக்கு கோயில் கட்டுறாய்ங்களாம்’

ஹன்ஷிக

குஷ்புவுக்கு கோயில் கட்டி தமிழனின் பெருமையை உலகெங்கும் ஓங்கி முழங்கியதன் தொடர்ச்சியாக, நம்ம ஆட்கள் அடுத்து கோயில் கட்ட கிளம்பியிருப்பது ஹன்ஷிகா மோத்வாணிக்காக.

வரும் செப்டம்பரில் ஆத்தாவின் கோயில் பணிகள் தொடங்கவிருப்பது, மதுரைக்கு அருகே உள்ள உசிலம்பட்டியில்.

இது தொடர்பாக, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பட ரிலீஸிலிருந்தே நிதி வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும், ஹன்ஷிகா ஆத்தாவின் பக்தர்கள், கோவில் திறப்பு விழாவுக்கு வர வேண்டி மோத்வாணிக்கு அழைப்பும் விடுத்தார்களாம்.

’’தன்னோட கோயிலை தெய்வமே நேர்ல வந்து திறந்து வச்சதா இதுவரைக்கும் சரித்திரமும் இல்ல, பூகோளமும் இல்ல. அத நீங்க வந்து உடைக்கோணும் தாயே’’ என்பது உசிலை பக்தர்களின் வேண்டுகோள்.

தன்னை அவ்வாறு பக்தர்கள் தொடர்பு கொண்டதை ஊர்ஜிதம் செய்த ஹன்ஷிகா,’’ சில தினங்கள் முன்பு எனது ரசிகர்கள் சிலர் தொடர்பு கொண்டு எனக்கு கோயில் கட்டப்போவதாக சொன்னதும் ஆரம்பத்தில் மெய் சிலிர்த்து, பின் சுதாரித்துக் கொண்டு, என் மீது அன்பைப்பொழிவது ஓ.கே. ஆனால் கோயில் கட்டும் அளவுக்கு போகவேண்டாமே என்று சொன்னேன். ஆனால் அவர்கள் நான் சொல்வதை கேட்பது போல் தெரியவில்லை’’ என்கிறார்.

தற்போது கோயில் வரி வசூலிப்பில் ஈடுபட்டிருக்கும் பக்தர்கள், அத்தோடு நின்று விடாமல், ஆத்தா ஹன்ஷிகா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘வேட்டை மன்னன்’ சேட்டை’ வாலு’ போன்ற படங்களின் ஸ்டில்களையும் தீவிரமாக சேகரித்துவருகிறார்களாம்.

ஆத்தாவின் ஒவ்வொரு பட கெட்-அப்பையும் கோயில் பிரகாரங்களைச் சுற்றி சிலைகளாக வைப்பதற்காக இப்படி பல்வேறு பட ஸ்டில்களை பக்தர்கள் சேகரித்து வருவதாக பி.பி.சி. வட்டாரங்களில் படபடப்பாக பேசப்படுகிறது.

ஹன்ஸ்