பரத்பாலாவை ஓரங்கட்டிவிட்டு, திடீர் டைரக்டராக மாறிய தனுஷ்

dhanush-bharthabala1

’அண்ணன் செல்வராகவனையெல்லாம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்ட தமிழ்சினிமாவில், அவரைவிட அறிவாளியான நாமல்லாம் படம் இயக்காம இருக்கோமே’ என்ற எண்ணம் தனுஷுக்கு நீண்ட காலமாகவே உண்டு.

டைரக்‌ஷனில் இறங்கினால் எப்படியும் ஒரு வருடம் வீணாகும். போட்டிக்கு இன்னும் சில சுள்ளான்கள் வந்துவிடுவார்கள் என்ற எண்ணத்திலேயே

அதை தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தார். ஆனால் கடந்த பதினைந்து நாட்களாக சத்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் தனுஷ்.

மேட்டர் இதுதான். பெரும்பொருட்செலவில் ஆஸ்கார்பிலிம்ஸ் தயாரிப்பில் பரத்பாலா என்பவர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிற படத்தின் படப்பிடிப்பு பதினைந்து நாட்களுக்கும் மேல் நடைபெற்று முடிந்திருக்கிறது.இன்னும் பெயர் சூட்டப்படாத இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு ஆப்பிரிக்காவிலுள்ள நமீபியாவில் நடந்தது. அங்கு படப்பிடிப்புக்குப் போன இரண்டாம் நாளே, பரத்பாலாவை ஒரமாக உட்காரச் சொல்லிவிட்டு, சீன் பேப்பரை வாங்கிய தனுஷ் அதில் நிறைய திருத்தங்களைச் செய்தாராம்.

அதேபோல ஒளிப்பதிவு சம்பந்தமாகவும் பல மாற்றங்களைச் சொன்னாராம்.பரத்பாலா சொன்னதைவிட இது நன்றாக இருக்கிறது என்று ஒளிப்பதிவாளர் உட்பட குழுவில் பலரும் சொல்ல உற்சாகமடைந்த தனுஷ், மூன்றாம் நாளிலிருந்து மொத்த நாட்களிலும் அவரே படத்தை இயக்கத் தொடங்கி விட்டாராம்.

படப்பிடிப்புத் தளத்தில் இருந்த தயாரிப்பாளரும்,அவர் சொல்கிறபடியே செய்யுங்கள் என்று சொல்லிவிட்டதால்,இதுகுறித்து யாரிடம் புகார் செய்வது, அல்லது இப்படியே சும்மா இருந்து விடுவதா? என்று தெரியாமல் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தாராம் பரத்பாலா.

எங்கோ நமீபியாவில் நடந்ததால் எவர் கண்ணிலும் படாமல் நாம் படத்தை இயக்கிவிட்டோம் என்று தெம்பாக இருந்திருப்பார் தனுஷ். இனிமேல் அவர் நிறைய சிக்கல்களைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.

dhanush-bharthabala12dhanush-bharthabala3