’கண்ணா லட்டு தின்ன ஆசையா’?- பவர் ஸ்டாரை கலாய்க்கும் சந்தானம்

powerstar

இணைய மக்களுக்காகவே, தன் வாழ்வை பணயம் வைத்து, வாழ்ந்துகொண்டிருப்பவர் டாக்டர் பவர்ஸ்டார் சீனிவாசன்.

இவரது பாப்புலாரிட்டி எதிர்காலத்தில் ஏடாகூடமாக எகிறப்போகிறது என்பதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட காமெடி நடிகர் சந்தானம், தனது குழுவினரை வைத்துக்கொண்டு, பவர்ஸ்டாருக்காகவே ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்ற டைட்டிலில் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ண ஆரம்பித்திருக்கிறாராம்.

ஆட்டையாம்பட்டி என்ற சாதாரண குக்கிராமத்தில் பிறந்து ஆட்டுக்குட்டிகளை மேய்த்துக்கொண்டிருக்கும் பவர்ஸ்டார் எப்படி அமெரிக்க ஜனாதிபதியாகிறார் என்று போகும் இந்தக் கதையில், சின்ன வயசில் பவரின் மந்தையில் ஆடுதிருட ஆரம்பித்து, பின் அவரது வாழ்க்கைப்பயணத்தில் தன்னையும் பணயம் வைக்கும் பவரின் நெருங்கிய நண்பராக படம் முழுக்க வருகிறார் சந்தானம்.

‘’இண்டஸ்ட்ரியில உள்ள அத்தனை பெரிய ஹீரோக்களும் உங்களோட சேர்ந்து நடிக்கனும்னு ஆசைப்படுறப்ப, உங்களுக்கு எப்படி இப்பிடி ஒரு விபரீத ஆசை’’? என்று சந்தானத்தைக் கேட்டபோது,’’ ஆரம்பத்துல இந்த நியூசை நான் வெளிய சொன்னப்ப , மத்தவங்க மாதிரியே நானும் அவரோட ‘பவர்’ தெரியாம கலாய்க்கிறேன்னுதான் நினைச்சாங்க. ஆனா எங்க காம்பினேஷன்ல ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை உறுதியா எடுப்பேன்

‘கதை எங்க லொள்ளு சபா டீமோடது. இப்போதைக்கு என்னையே டைரக்ட் பண்ணச்சொல்லி பசங்க நச்சரிக்கிறாங்க. அந்த முடிவை எடுக்க கொஞ்சம் அவகாசம் வேணும். யோசிக்கணும்.’’ என்கிற சந்தானம் முழுக்கதையும் ரெடியானபிறகுதான் பவர்ஸ்டாரை சந்திப்பதாகவே இருக்கிறாராம்.

powerstarpowerstar