vikram-oscar-ravi-shankar1

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பது ‘நீயா நானா? ‘என்று நடந்த போட்டியில், விக்ரம் ஓரளவு வெற்றியை எட்டிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் அந்த வெற்றிக்குப்

பின்னே வேதனையான செய்தி ஒன்று விக்ரமை விரட்டிக்கொண்டிருக்கிறது.

நடிகர், நடிகையர்களிடம் கால நேரத்திற்கேற்றவாறு சம்பளம் பேசுவதில் கரைகண்டவர் ஆஸ்கார் ரவி. இந்தப்படத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் விக்ரம் கட்டிய துடிப்பை, அவரது சம்பளத்தைக் குறைப்பதற்கான துடுப்பாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டாராம் ரவிச்சந்திரன்.

“இந்த காம்பினேஷன் எனக்கு முக்கியம். அதனால தாண்டவத்துல நான் வாங்குன 10 கோடி சம்பளத்தை குறைக்காம அப்பிடியே குடுத்துருங்க” என்று விக்ரம் ஆரம்பிக்க, ஆஸ்கார் ரவியோ,’’ அந்நியனுக்கு அப்புறமா உங்களுக்கு ஒரு படமும் உருப்படியா ஓடல. நீங்க வெற்றிப்படம்னு சொல்ற ‘கந்தசாமி எடுத்த தாணுவும், ‘தெய்வத்திருமகள்’ எடுத்த மோகன் நட்ராஜனும் நொந்தசாமிகளாத்தான் நடமாடிக்கிட்டிருக்காங்க . இப்பவும் நான் சொன்னா ஷங்கர் வேற ஹீரோவுக்கு போக ரெடியாத்தான் இருக்கார். அதனால ஃபைனலா 3 கோடி தருவேன். வேணும்னா அதை வாங்கிட்டு நடிங்க. இல்லைன்னா ஆளை விடுங்க’’ என்று ஏறத்தாழ மிரட்டாத குறையாக சம்பளத்தை குறைக்கிறாராம்.

வெளியே சொல்லவும் முடியாமல், உள்ளே மெல்லவும் முடியாமல் தவிக்கிறார் சீ..யான்.

vikram-oscar-ravi-shankar2 vikram-oscar-ravi-shankar3

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.