‘வில்லங்கமான’ படத்தில் லைவ்வாக நடிக்கப்போகும் ஷியா லாபௌ

ஷியா லாபௌ

ட்ரான்ஸ்பார்மர் படப் புகழ் ஷியா லாபௌ(Shia LaBeouf), தான் புகழ் பெற்ற இயக்குனர் லார்ஸ் வான் ட்ரியரின்(Lars Von Trier) புதிய படத்தில் லைவ்வாக நடிப்பது பற்றித்தான் இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.

வான் ட்ரியர் சர்ச்சைக்குள்ளான படங்களை எடுப்பவர். இவரது அடுத்த படமான ‘நிம்போமேனியாக்’ காமத்தில் எளிதில் திருப்தியுறாத ஒரு பெண்

தன் இச்சையான மனத்தின் இஷ்டப்படி நடப்பதைப் பதிவு செய்கிறது.

வெளிப்படையான செக்ஸ் காட்சிகளும், போதைப் பொருள் உபயோகம் போன்ற சட்டவிரோதமான காரியங்களும் இடம்பெறும் இப்படத்தில் இயக்குனர்
செய்திருக்கும் புதுமை தான் என்ன?

படத்தை இரு விதங்களாக எடுக்கும் இயக்குனர், ஒரு படத்தை சென்சார் பண்ணப்படாத அடல்ட்ஸ் ஒன்லி படமாக எடுக்கிறார். இந்த அடல்ட்ஸ் ஒன்லி வெர்ஷன் படத்தில் எதுவுமே போலியாக இல்லாமல் நிஜமாகவே நடக்கும்.

அதாவது செக்ஸ் காட்சி என்றால் அது நிஜமாகவே உடலுறவுக் காட்சியாகவும், போதைப் பொருள் உபயோகம் என்றால் நிஜமாக போதைப் பொருள் உபயோகிப்பதாகவும் (யாரையும் நிஜமாக கொல்லாமலிருந்தால் சரி..) எடுக்கிறாராம். இந்தக் காட்சிகளை திரையில் மங்கலாக காட்டப் போகிறார்களாம். இதில் ஷியாவுக்கும் சில பல செக்ஸ் சீன்கள் இருப்பதாக ஸ்க்ரிப்டில் இருக்கிறதாம்.

ஷியாவுக்குக் கொடுத்த ஸ்க்ரிப்டில் முதல் பக்கத்திலேயே ‘இதில் சொல்லப்பட்டிருப்பவைகளை நாம் நிஜமாகவே நடத்தப் போகிறோம்’ ‘இப்படிப் போட்டிருக்கிறது என்று விஷமமாகச் சிரிக்கிறார் ஷியா. இவர் ஏற்கனவே ஒரு மியூசிக் வீடியோவில் நிர்வாணமாக நடித்து புயலைக் கிளப்பியவர்.

இந்த விஷயங்களைக் கேட்டு நொந்து போயிருப்பவர் ஷியாவின் காதலி கேரொலின் போ(Karolen Pho) தான். சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேரொலின் திடீரென்று அழுததன் காரணமும் இது தான் என்கிறார்கள். லைவ்வாக எதை எதைத்தான் காட்டுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
ஷியா பௌ - கேரோலின்