கிளியார் பதில்கள்: ’பாக்குறவங்க கதி கலங்குற மாதிரி ஒரு இண்டர்வெல்

பவர் ஸ்டாரின் பவர் பாடி..

தங்கர் பச்சான் இயக்கத்தில் அண்ணன் டி.ராஜேந்தர் ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்கும் கிளியாரே?’- டி.ரமேஷ், திருவண்ணாமலை.

கூட பவர்ஸ்டாரையும் சேத்துக்கலாமே. தங்கர் இயக்கத்துல மூனு பேரும் அண்ணன் தம்பியா நடிக்கிற மாதிரி என் கிட்ட ஒரு கதை இருக்கு.

பவர் மூத்தவர், .டி.ஆர். நடுசெண்டரு தம்பி. தங்கர் கடைக்குட்டி. பவருக்கு அண்ணி நயன் தாரா. டி.ஆருக்கு த்ரிஷா.

தம்பி தங்கருக்கு சொந்த வாயில தோஷம் இருக்கதால பொண்ணே கிடைக்கலை. தம்பிக்கு சரியான பொண்ணு அமையிற வரைக்கும், தங்களோட முதலிரவை

கொண்டாடுறதில்லைன்னு முடிவெடுத்து பவரும் , டி,ஆரும் தங்களோட ரூமை மாத்திக்கிட்டு அண்ணிகளோட ரூம்ல, அதாவது டி.ஆரு அண்ணி நயன் தாரா ரூம்லயும், பவர் த்ரிஷா ரூம்லயும் படுத்துக்கிறாங்க.

27 வது சீன்ல சிம்பு சின்னதா ஒரு கெஸ்ட் ரோல்ல வர்றாரு.

இப்ப பாக்குறவங்க கதி கலங்குற மாதிரி ஒரு இண்டர்வெல் விடுறோம். மீதியை வெள்ளித்திரையில் காண்க.

நடிகை சுனேனாவின் அம்மாவும், த்ரிஷா அம்மா மாதிரியே எல்லா விழாக்களிலும் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டாராமே?’- ரவி,மும்பை.

உங்க உலகத்துல எப்பிடின்னு தெரியலை. எங்க சினிமா ஆளுங்க மத்தியில த்ரிஷா, சுனைனாவை விட அவங்க மம்மிகளுக்கே ‘ரசிகருங்க’ ஜாஸ்தி.

நானும் சமீபத்துல ஒண்ணுரெண்டு ஃபங்சன்கள்ல சுனைனாவோட மம்மியை பாத்தேன். ஒருவேளை அவங்க நடிக்க வந்தா சுனைனாவோட மார்க்கெட் காலியாகுறது கன்ஃபர்ம்.

சேரன் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார்? சில மாதங்களாகவே அவரைப் பற்றி எந்த செய்தியையுமே படிக்கடி.ஆர். முடியவில்லையே? தர்மர், மேலூர்.

ஊர்ப்பாசம் பொங்குதுங்களோ? உங்க சேரன்க்கு இப்போ கொஞ்ச நாளா நேரன் சரியில்லைங்கிறதை அவரே உணர்ந்துட்டு, சைலண்டா ஆபிஸ் போறதும், திரும்ப வீட்டுக்கு வர்றதுமாதான் இருக்காராம்.

வர்ற ஆடி முடிஞ்சி ஆவணி பொறந்தா டாப்பா வருவாருன்னு அவரோட அசிஸ்டெண்டுங்க பேசிக்கிறாங்க.

மாசக்கணக்குல பேட்டாவே தரலைன்னாலும் என்ன விசுவாசம் தம்பிங்களா உங்களுக்கு.

சமீபத்துல உன்னை புல்லரிக்க வச்ச சமாச்சாரம் ஏதாவது இருக்கா கிளிப்பயபுள்ள?’ பன்னீர்ச்செல்வம், பொள்ளாச்சி.

தேவிஸ்ரீதேவி சதீஷ்ன்னு நம்ம நண்பர் ஒருத்தர் அஞ்சு வருஷத்துக்கு முந்தியே ரிலீஸான ராஜமவுலியோட ‘சத்ரபதி’ படத்தை வாங்கி, ஏதோ போனமாசம் தான் ஆரம்பிச்ச மாதிரி பூஜை போட்டார்.

சரி அடுத்து அதோட ரிலீஸை நோக்கி வந்துருவார்னு பாத்தா, புதுசா அந்தப் படத்தை ஆரம்பிச்சிருந்தா என்னென்ன பண்ணுவோமோ அவ்வளவு அட்டகாசமும் பண்றார்.

‘இன்று முதல் படப்பிடிப்பில்..ல ஆரம்பிச்சி, நடுக்கட்ட படப்பிடிப்பு, நடுக்காட்டில் படப்பிடிப்பு வழியா, இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வரைக்கும் அவர் பண்ற ரகளை தாங்க முடியலை.

இதைக்கேள்விப்பட்டு ராஜமவுலி சொன்னாராம், ‘ சத்ரபதி’ படம் எடுக்குறப்ப நான் கூட இப்பிடியெல்லாம் பண்ணலையேடா’

‘சந்திரமவுலி’ங்கிற பேர்ல படம் வர்ற வெள்ளி ரிலீஸ் பாஸ்.

சுனைனாசேரன்