முன் குறிப்பு : இப்பட ரிலீஸுக்கு முன்பே கே.வி.ஆனந்த் ஏதோ இங்கிலீஸ் பட டிவிடியை சுட்டு படம் பண்ணிக்கொண்டிருப்பதாக அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள். அப்படி அபாண்டமாக குற்றம் சாட்டுவதை, இக்கணமே நிறுத்திக்கொள்ளுங்கள். கே.வி.ஆ. அப்படிப்பட்டவரல்ல. பிறகு எப்படிப்பட்டவர்? அட கடைசி பாரா வரைக்கும் கொஞ்சம் பொறுமையாத்தான் இருங்களேன்பா…

இந்தியாவின் முன்னணி விநியோகஸ்தர்களான ஈராஸ் வெளியிட,தமிழகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்த [?] கல்பாத்தி அகோரத்தின் ஏ.ஜி.எஸ்.பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ‘மாற்றான்’ ஓடும் நேரம் 2மணிநேரம் மற்றும் 49 நிமிடங்கள்.

இந்த நேரக்குறிப்பு, காலக்குறிப்பையெல்லாம் விட்டுட்டு கதைக்கு வாங்க பாஸ் என்று நீங்கள் மனசுக்குள் மறுகுவது கேட்கிறது.

அதை சபைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டு கதைக்கு வருகிறேன்.

வருகிறேன் என்று எழுதிவிட்டு முக்கால்மணி நேரமாக முக்குமுக்கென்று முக்கிக்கொண்டிருக்கிறேன். கதையை எங்கேயிருந்து துவங்குவதென்று தெரியாமல்.

ஒரு சயிண்டிஸ்ட் அப்பாவுக்கு அகிலன், முகிலன் என்று ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பிறக்கிறார்கள். அகிலன் கல்பாத்தி அகோரம் மாதிரி, நம்பிப் படமெடுக்க வந்த நல்லவன். முகிலன் கே.வி.ஆனந்த் மாதிரி கொஞ்சம் ரிஸ்க் பார்ட்டி.

இவர்களோடு ஒரு உக்ரைன் நாட்டு பெண் நிருபரை உள்குத்தாக வைத்துக்கொண்டு, காஜல் அகர்வால் கதைக்குள் வருகிறார்.

அந்த உக்ரைன் நிருபியை உள்வாளி என்று களவாணி பட்டம் கட்டி அகிலமுகிலன்களின் அப்பா கொன்றுவிட, அவர் இறக்கும்போது, அப்பாவின் சதிவேலைகள் அடங்கிய பென் –ட்ரைவை தின்றுவிட, பல்வேறு திருப்பு முனைகளுடன் கதை உக்ரைனை நோக்கி உக்கிரவேகம் எடுக்கிறது.

அங்கு அடுத்து நடக்கும் அக்கிரமங்களை எழுதினால், நீங்கள் என்னை கே.வி.ஆனந்தின் கையாள் என்று அபாண்ட பட்டம் சுமத்துவீர்கள் என்பதால் கதைக்கு இத்தோடு கதம் கதம்.

பாக்கெட் நாவல்கள் எழுதிய காலத்திலேயே பன்னி பலகுட்டி போட்ட மாதிரி, வவுத்தால போனவனுக்கு வண்டிவண்டியா ..ண்டி வழியா போன மாதிரி எழுதித்தள்ளியவர்கள் இப்படத்திற்கு கதை-வசனம் எழுதியவர்களான ‘சு’னா ’பா’னாக்கள்.

உக்ரைன் நாடு, 92-ஒலிம்பிக்ஸில் நிறைய மெடல்கள் வாங்கியதைக்கொண்டு இவர்கள் அமைத்திருக்கும் திரைக்கதையும், அங்கே மருத்துவமனையில் சேது’ விக்ரமை பாண்டிமடத்தில் கட்டிப்போட்ட மாதிரியே, ஒலிம்பிக் வீர்ர்களை ஒரு மெண்டல் ஆஸ்பத்திரியில் கட்டிப்போட்டிருப்பதை காட்டும்போதும், நம் கபாலம் சூடு பிடிக்கிறது. தியேட்டர் ‘போ போ’ என்கிறது, வீடு ‘வாவா’ என்கிறது.

கே.வி. ஆனந்த், சூர்யாவில் தொடங்கி மொத்த டீமுக்குள்ளும், ஒரு வெற்றி மிதப்பு படம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே வந்துவிட்டதால் ஏற்பட்ட அலட்சியத்தை, படம் நெடுகவே பார்க்க முடிகிறது.

நாங்க ஒரு கதை சொல்வோம், நாங்க ஒரு நடிப்பு நடிப்போம். நாங்க ஒரு பாட்டு வைப்போம். அதைப்பாக்குறது உங்க தலையெழுத்து என்பது போன்ற அலட்சியம் அது.

அதிலும் க்ளிமேக்ஸில் சூர்யாவைப் பார்த்து அவரது ஃப்ராடு அப்பா ‘ நீ ஒரு அப்பனுக்கு பொறந்தவன் இல்லடா. பத்துப்பேர் உனக்கு அப்பன்’’ என்று சொல்லிவிட்டு,’’ என் கணிப்புப்பிரகாரம், ’நீ ஒரு ஃப்ளாப்புடா’ என்னும்போது, தன்னைமறந்து தியேட்டர் ஆபரேட்டர் உட்பட அத்தனைபேரும் கைதட்டுகிறார்கள்.

மெயின் டெக்னீஷியன்களான ஒளிப்பதிவாளர் சவுந்தரும், இசை’அமைப்பாளர்’ ஹாரிஸும் படத்தில் இடம் பெற்ற ஃபாரீன் லொகேஷன்களில் ஒரு நல்ல இடமாகப் பார்த்து கொஞ்சநாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு வருவது நல்லது.

படத்தின் ஒரு காட்சியில் ’’இந்த செண்டை அடிச்சிக்கிட்டு, பன்னி போனாக்கூட பத்து ஃபிகருங்க திரும்பிப்பாக்கும்டா ’’என்று அகிலன்,முகிலனைப் பார்த்து பேசும் வசனம் அளவுக்கு, இயக்குனர் கே.வி.ஆனந்தும், கதையை விட பிரம்மாண்டம், கிளாமர், டேக்கிங்ஸ், மேக்கிங்ஸ் போன்ற நாத்தமெடுத்த செண்ட்களின் மீது நம்பிக்கை வைத்திருப்பதிலிருந்து தெரிகிறது.

ஆனா ஃபாரீன் செண்டே அடிச்சிட்டுப் போனாலும் பன்னி பன்னிதான் ஆனந்த்.

பின் குறிப்பு: முன்குறிப்புல ஒரு பேச்சு, பின்குறிப்புல ஒரு பேச்சு இல்லை. இப்பவும் சொல்றேன். கே.வி. ஆனந்த் இந்த ‘மாற்றான்’ கதையை ’ஒரு’ டி.வி.டி.யிலருந்து திருடலை. ஏகப்பட்ட டிவிடியிலருந்து உருவியிருக்காங்கோவ்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.