annakkodiyum-kodiveeranum-releases-dth

காரணகாரியமில்லாமல் உணர்ச்சிவசப்படுவதில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு இணை அவர் ஒருவரே. சமீபகாலமாக வேலவெட்டி எதுவுமின்றி தவித்த அவருக்கு, கமலின் ‘விஸ்வரூபம்’ டி.டி ஹெச். பஞ்சாயத்து கைக்கு எட்டியதுமே, இருப்புக்கொள்ளாமல் எகிறிக்குதிக்க

ஆரம்பித்துவிட்டார்.

கமலுக்கு ஆதராவான தனது அறிக்கைகளில் ‘ விஸ்வரூபம்’ டி.டி.ஹெச்சில் வெளியிடப்படுவதை எதிர்ப்பவன் தமிழின விரோதி. அவனிடம் ஓடுவது அந்நிய நாட்டு குருதி’ என்று கொதித்து வந்தவர், திடீரென தனது ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ பட நிலைமை நினைவுக்கு வர, இன்னும் அதிக ஆத்திரத்துக்கு ஆளாகிவிட்டார்.

கடந்த ஆண்டின் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பல சொல்லொண்ணாத்துயர்களைச் சந்தித்து முடிந்திருக்கும் அவரது’ அ.கொ.கொ.வீ’ படத்தையும் இதுவரை விநியோகஸ்தர்கள் யாரும் திரும்பிக்கூடப்பார்க்கவில்லை. படத்தின் ஏரியா வியாபாரத்தை பாரதிராஜா துவங்கிவிட்டார் என்று செய்தி கிளம்பிய நாளிலிருந்தே, அவரது அலுவலகம் இருக்கும் ஜெமினி பார்சன் பக்கம் யூரியா வாங்கப்போகும் விவசாயி கூட போவதில்லை.

இந்நிலையில் கமலைப்போலவே தானும் விநியோகஸ்தர்களால் பழிவாங்கப்பட்டதாக உணர்ந்த உணர்ச்சிக்கலைஞர் பாரதிராஜா, அவரது பாணியிலேயே தனது ‘அ.கொ.கொ.வீ’ படத்தையும் போஜ்பூரி மொழி உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் டி.டி.ஹெச். கேபிளில் ஒளிபரப்பலாமா என்று ஓசித்து வருகிறாராம்.

இத்தகவலைக் கேள்விப்பட்டு அடிவயிறு கலங்கிப் போயிருப்பவர், சாட்சாத் நம்ம கலகக் கலைஞர் கமல்தான். ‘ நான் எண்பதுகோடி செலவழிச்சி, அது வசூலாகனுமேங்குற கவலையில டி.டி.ஹெச்’ல ரிலீஸ் பண்ணலாம்னு ப்ளான் பண்றேன். அவரு வெறும் எண்பதாயிரத்துக்கு படம் எடுத்துட்டு இப்பிடி காமெடி பண்றாரே இது தர்மமா, நியாயமா?’ என்பது கமலின் குருதிப்புனல் கொதிக்கும் குரல்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.