அசிஸ்டெண்ட் டைரக்டர் அவதாரம் எடுக்கிறார் அனுஷ்கா

anushka

’கலைமகளின் கைப்பொருளே’ என்று தற்போதைய நடிகைகளில் கவுரவிக்கப்படவேண்டியவர் ஒருவர் உண்டென்றால் அது அக்கா நம்ம அனுஷ்காதான். ‘அருந்ததி’ மாதிரி விலை உயர்ந்த கேரக்டரிலும் நடிப்பார், அடுத்த படத்திலேயே விலைமாதுவாகவும் நடிப்பார்.

ஆனால் வரும் வருடம் அனுஷ்காவிடமிருந்து செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ தவிர்த்து, அதிக படங்கள் எதிர்பார்க்க முடியாது. காரணம் அனுஷ்காவின் கனவு கேரக்டரான ‘ருத்ரம்மா தேவி’.

தமிழில் ‘கில்லி’யடித்த, ஒரிஜினல் ‘ஒகுடு’வின் இயக்குனர் குணசேகர், பெரும்பொருட்செலவில் இயக்கவிருக்கும் பீரியட் படம் ’ருத்ரம்மா தேவி’. வரும் மார்ச்சில் ஷூட்டிங் தொடங்கவிருக்கும் இப்படத்துக்கு, இதுவரை முன் தயாரிப்புச்செலவுகள் மட்டுமே சில கோடிகளை எட்டிவிட்டதாம்.

தனது கேரக்டரை ஹோம் வொர்க் செய்வதற்காக கதை கேட்க குணசேகரை சந்தித்த அனுஷ்கா, அந்தக்கதையில் ஐக்கியமாகி,’இந்தப் படத்துல ருத்ரம்மா தேவியா நடிச்சிக்கிட்டே உங்க கிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டராவும் வேலை பாக்குறேன் சார்’ என்று செட்டில் ஆகிவிட்டாராம்.

இயக்குனருடன் நடிகை ‘டிஸ்கசனில்’ கலந்துகொண்டார் என்று கசமுசா கிசுமுசா எழுதுவார்களே அதுபோன்ற டிஸ்கசன் இல்லையாம் இது. குணசேகரின் அலுவலகத்தில் அனுஷ்கா, அவருடன் இருக்கும் சின்சியாரிட்டியைப் பாருங்க, உங்களுக்கே விளங்கும்.

‘ருத்ரம்மா தேவி’யை இசையால் அலங்கரிக்கப்போறவர் நம்ம இசைஞானி.