தடை, தியேட்டரை உடை’ மீண்டும் தடை’- அரசியலில் குதிக்கிறார் விஸ்வரூபன்

kamal-viswa-1

யாரும் எதிர்பாராத ட்விஸ்டாய், நீதிபதி வெங்கட்ராமன் நீக்கிய ‘விஸ்வரூபம்’ தடைக்கு, இடைக்கால தடை விதித்து அமர்வு நீதிபதிகள், சற்று முன்னர் தீர்ப்பு வழங்கினர். ‘விஸ்வரூபம்’ வெளியானால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டே இந்த இடைக்காலத்தடையை விதித்திருப்பதாக அவர்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

.’விஸ்வரூபம்’ நாளை வெளியாகிவிடும் என்ற நம்பிக்கையில் பிஜாய் நம்பியாரின் ‘டேவிட்’ படத்தை இரண்டு வாரங்கள் தள்ளிவைத்து இன்று அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் ‘ விஸ்வரூபம்’ தடைச்செய்தி மீண்டும் இடியாய் வந்து இறங்கிவிட்டது.

இதை எதிர்த்து கமல், உச்சநீதிமன்றம் போகக்கூடிய  வாய்ப்பு இருக்கிறதென்றாலும், ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்களால் நொந்துபோயிருக்கும் கமல், அதிரடியாய் அரசியல் அவதாரம் எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று அவரது நெருங்கிய வட்டாரங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் இன்று காலை தமிழகம் முழுக்க நடத்தப்பட்ட வன்முறைகளே, முன்கூட்டியே முடிவுசெய்யப்பட்ட ‘தடைக்குத்தடை’யை நியாயப்படுத்த செட்-அப் செய்யப்பட்டவையே என்பதை யாரும் சொல்லித்தெரியவேண்டியதில்லை.