‘தமிழ்சினிமாவின் அடுத்த கருப்பழகன் கருணாஸ் தான்’- சும்மா ரகளை பண்றாங்க

karunas

தமிழ்ப்படங்களில் வரவர நகைச்சுவைகளை ரொம்பவே மிஸ் பண்றோம் என்று நினைப்பவர்கள் தவறாமல் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சிகளை அட்டெண்ட் பண்ணலாம்.

ஒரே நேரத்தில் கருப்பா பயங்கரமாகவும், பயங்கர கருப்பாகவும் இருக்கும் காமெடி கருணாஸின் ஹீரோ அவதார

மூன்றாவது படைப்பான ‘சந்தமாமா’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது.

இயக்குனர் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் முரளி, ஒளிப்பதிவாளர் ஆனந்தக்குட்டனில் துவங்கி படம் முழுக்கவே நிறிய மலையாள சகோதரர்கள். மலையாளத்திலிருந்து ரீ-மேக்கப்பட்ட ‘ திண்டுக்கல் சாரதி’யின் செண்டிமெண்ட் தொடர்ச்சியாக இருக்கலாமோ என்று எண்ணத்தோன்றாமல் இல்லை.

இடையில், தப்புமா என்று சொல்லக்கூடிய, ஒன்றிரண்டு உப்புமா படங்களில் தலைகாட்டி நம்ம சொந்தமாமாவுக்கு ஜோடியாக புரமோட் ஆகியிருந்த பெங்காலி ரசகுல்லா ஸ்வேதா பாஸு.’ அடுத்தவாட்டி கண்டிப்பா மேடையில தமிழ்ல பேசுறேன் பாஸ்’ என்று ஒற்றை வரியில் மிரட்டிவிட்டு அமர்ந்தார்.

படத்தைப்பற்றி என்னத்தைப்பேசுறது என்று நினைத்தோ என்னவோ, மேடையில் மைக்கைப் பிடித்த அனைவருமே, ‘ தோற்றத்தால கருப்பா இர்ந்தாலும், உள்ளத்தால ரொம்ப சிறப்பானவரு கருணாஸ்’ என்று அவருக்கு காண்டாக்ட் சர்டிபிகேட் கொடுப்பதிலேயே கவனமாக இருந்தார்கள்.

இப்பல்லாம் கருப்பா இருக்கிறவங்க, சிவப்பா இருக்கிறவங்க ரெண்டு வகையறாவுமே பொய் சொல்றதில்லை. ஆனா மாநிறமா இருக்குறவங்கதான் அநியாயத்துக்கு புளுகுறாய்ங்க.