ட்விட்டரை விட்டு வாக்-அவுட்டர் செய்தார் ஷ்ரேயா

shreya-1

உங்க சங்காத்தமே வேணாம். இனி ட்விட்டர் இருக்குற திசைப்பக்கம் தலைவச்சிக்கூட படுக்கமாட்டேன்என்று நேற்றோடு தனது ட்விட்டர் கணக்கை முடித்தார் நடிகை ஷ்ரேயா.

கொஞ்சம் திறந்த இதயத்துடன் ட்விட்டரில் கருத்துக்களையும் படங்களையும் வெளியிட்ட நடிகைகளில் ஷ்ரேயாவும் ஒருவர். இதனாலேயே இவருக்கு லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் இருந்தனர். ஆனால் இந்த ஃபாலோயர்கள், சில நாட்களாக, அதாவது ஷ்ரேயா அரை நிர்வாணப் போஸ்கள் கொண்ட சில ஸ்டில்களை வெளியிட்ட பிறகு ரொம்பவும்லோயர்களாகநடந்துகொள்வதாக புகார்ந்துள்ளார் ஷ்ரேயா.

அதிலும் குறிப்பாக தீபா மேத்தாவின்மிட் நைட் சில்ட்ரன்படத்து ஷ்ரேயாவின்லிப் டு லிப்காட்சிகளைப் பார்த்து சிலர்எங்களுக்கும் அப்படி ஒரு சான்ஸ் தரக்கூடாதா?’ என்று எகத்தாளம் செய்ததாகத்தெரிகிறது.

கொஞ்சம் எக்ஸ்போஸ் பண்ணுன ஸ்டில்களை ட்விட்டர்ல போட்டா, இவ தப்பான பொண்ணு. என்ன சொன்னாலும் கேப்பான்னு தப்பா நினைக்கிற ஒரு உலகத்தோட இவ்வளவு நாளா உறவாடிக்கிட்டிருந்தோமேன்னு நினைச்சி ரொம்ப அவமானமா இருக்கு. பை பை டியர்ஸ். யுவர்ஸ் ஷ்ரேயா வித் TEARS’- இதுதான் ட்விட்டரில் ஷ்ரேயா போட்ட கடைசி கமெண்ட்.

அத்துமீறுன அக்கியூஸ்டுகளை எல்லாம் மன்னிப்புக் கேக்க வைக்கிறோம். ப்ளீஸ் மறுபடியும் வந்துடுங்க ஷ்ரேயா,.