த்ரிஷாவின் ‘டாட்டு’ல மழை’

trisha-1

தனது உடலின் வாளிப்பான பாகங்களில்டாட்டூவரைந்துகொள்வதில் எப்போதுமே லேட்டஸ்ட்டூவாக இருப்பவர் நம்ம திரிஷா. அதிலும் விரும்பிச்சாப்பிடுகிறாரோ இல்லையோ, அவரது டாட்டூக்களில் விதவிதமான மீன்கள் கண்டிப்பாக இடம் பிடிக்கும். அதைக்கண்டு ரசிகர்கள் உள்ளம் வயித்தெரிச்சலில் துடிக்கும்.

 

கடந்த வாரம் தனது பாதம், மணிக்கட்டு, மற்றும் மார்பகத்தில் திவ்யமாக த்ரிஷா விதவிதமான டாட்டுக்களை வரைந்துகொண்டது, கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் கைகோர்க்கும்பூலோகம்படத்துக்காக.

த்ரிஷாவுடன் ஜெயம் ரவி பாடும் டூயட் பாட்டூவில், இந்த டாட்டூக்களைப் பற்றியும் வர்ணித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த இயக்குனர் கல்யாண், இளைய கவிப்பேரரசு மதன் கார்க்கியிடம் அந்தப்பொறுப்பை ஒப்படைத்தாராம்.

இதுவே வைரமுத்துவாக இருந்தால் திரிஷாவின் டாட்டூக்களை ஒருமுறை காட்டினால் பாட்டூ நன்றாக வருமே என்றிருப்பார். ஆனால் மதன் கார்க்கியோ, அந்த டாட்டூக்களை மனக்கண்ணில் பார்த்து மகிழ்ந்து இப்படி ஆரம்பித்தாராம் பாடலை,…

டாட்டாலே புத்தி சொன்னாய்,.. டாட்டாலே காதல்பக்தி சொன்னாய்,..உன்

டாட்டுக்களை சேட்டுக்கடை அடகு வாங்குமா?,..

ஆகமொத்தம் த்ரிஷாவின் டாட்டுல, கார்க்கியின் பாட்டு மழை.