துப்பாக்கி கலெக்ஷன் 100 கோடிக்கும் மேல்..?

vijay-thuppaakki4

ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த ஏழாம் அறிவே சீனா வரைக்கும் தமிழனை துரத்தி துரத்தி அடித்தது. அடுத்து எடுத்த துப்பாக்கியில் டெல்லி (இஸ்லாமியத்)தீவிரவாதிகளை அண்ணன் கமல் விஸ்வரூபம் எடுக்கும் முன்பாகவே தம்பி விஜய்யை விட்டு விரட்டி, அடி பின்னி விட்டார்.

அப்போதே முஸ்லீம் சகோதரர்கள் கொதித்தெழுந்து, ‘ஐயா கதையை கொஞ்சமாவது மாத்துய்யா’ என்றதற்கு ஏதோ பூசி மெழுகி படத்தை ஓட்டிவிட்டார்கள். ‘இதெல்லாம் சும்மா வெறுமனே பொழுதுபோக்கு, அதை பொழுது போக்காக மட்டுமே பாருங்கள், அரசியலா பார்க்காதீங்க’  (வெறுமனே பொழுது போக்குன்னா எதுக்கு சென்சார் போர்டெல்லாம் வைக்கிறாங்க.. பேசாம எல்லாம் அவுத்துப் போட்டு ஆடுங்கன்னு விடவேண்டியது தானே) என்று கூலாக சொல்லியபடியே ரசிக மகாசனங்கள் திருட்டு டிவிடியில் பார்த்தும் பத்தாமல் கூட்டமா முண்டியடிச்சு பார்த்ததில் முதல் நாள் கலெக்ஷன் மட்டுமே 9.5 கோடியாம். 1500 தியேட்டர்களில் உலகம் பூராவும் நவம்பர் 13 அன்று திரையிடப்பட்டது துப்பாக்கி. தற்போது நூறு நாட்கள் ஓடிய நிலையில் இந்தியாவில் மட்டும் அதன் கலெக்ஷன் 180 கோடி ரூபாயாம். இதை தைரியமாக அறிவித்திருப்பது முருகதாஸின் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல்  (இவங்களுக்கு இன்கம்டாக்ஸ் பிரச்சனையெல்லாம் இல்லையா பாஸ்).

தற்போது இந்த வெற்றி தந்த தெம்பிலும், கலெக்ஷனின் சந்தோஷத்திலும் இந்தப் படத்தை அப்படியே அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் எடுக்கக் கிளம்பிவிட்டார் முருகதாஸ். முருகதாஸ் சார் பாத்து சீக்கிரமா எடுத்து சீக்கிரமா ரிலீஸ் பண்ணிடுங்க. இல்லாட்டி இந்தியாவில் கமல் அய்யா எடுக்கப்போகும் விஸ்வரூபத்தோட(பார்ட் – 2) நீங்களும் போட்டி போட்டு முஸ்லீம்களை கொல்ல வேண்டியிருக்கும். துரோகி, தீவிரவாதி, பிற்போக்கானவன், மதவாதி போன்ற பட்டங்களையெல்லாம் சுமத்த வேண்டியிருக்கும். உங்களுக்கும் கலெக்ஷன் வேணுமில்லையா?

இத்தோடு விஸ்வரூபத்தின் கலெக்ஷன் கணக்கு வேறு சொல்லப்படுகிறது. 200 கோடியாம். தீவிரவாதி என்று முஸ்லீம்களை சாதாரண மக்கள் மனத்தில் நல்லா உருவேத்தி விட்டதுக்கு அய்யா கமலுக்கு இவ்வளவு காசு. பின்ன ஏன் இப்படி படமெடுக்கமாட்டார்? முஸ்லீம் கழுத்தை அறுக்குறான்னா சும்மாவா அறுக்குறான். அமெரிக்காகாரன் ஆப்கானிஸ்தான்ல எவ்வளவு குடும்பங்களை கருவறுத்தானோ? நல்லா படை பலம் வெச்சுகிட்டு, மீடியாவை வெச்சுக்கிட்டு, இந்த மாதிரி சினிமாவும் வெச்சுக்கிட்டு இவுக சொன்னா அது தான் நியாயம். அவுக பக்கத்து நியாயத்தை யார் கேப்பா?

இவர்கள் நூறு கோடி இருநூறு கோடி என்று ஏலம் விட்டுக் கொண்டிருக்க சைலன்ட்டாக 99 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது இந்தியாவில் எடுக்கப்பட்ட அந்த ஆங்கிலப்படம். அது சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை ஆங் லீ க்குப் பெற்றுத் தந்த ‘லைஃப் ஆப் பை’. மனிதனின் மிருகத்தனம் வாழ்வின் போராட்ட நெருக்கடியில் மோசமாக வெளிப்படும் என்பதை அழகியலாகச் சொன்ன படம் அது. லைஃப் ஆப் பை இந்த இரண்டு படங்களையும் விட மிகச் சிறந்த படமே.