‘தல’யின் அறிவுரையை தலைசாய்த்து கேளுங்கள்.

MunishWithAjith

“கடுமையாக உழைக்கவும்!!! நாணயமாக வரி கட்டவும்!!! குடும்பத்தை, குறிப்பாக மூத்தவர்களை மதித்து நடப்பதுடன்  அவர்களுடன்  நிறைய நேரத்தை செலவிடவும்!!! வருமானத்திலிருந்து ஒரு பகுதியை  இயலாதவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் கொடுக்க வேண்டும்!!!

அடுத்தவர்கள் வாழ்வில் உன் கருத்தை திணிக்காதே!!! உன் வாழ்வில் அடுத்தவர் கருத்தை திணிக்க  விடாதே!!! நீ யாருடன்  பணி  புரிய வேண்டும் என்று வெறும் பணத்தை நிர்ணயிக்க விடாதே!!! வாழு.. வாழ விடு ! இது என்னுடைய அறிவுரை அல்ல, என் வாழ்கை எனக்கு கற்று கொடுத்த அனுபவம்..” இப்படிச் சொன்னவர் ஒருபோதும் ரசிகர்களுக்கு பொதுவில் அறிவுரை சொல்ல விரும்பாத ‘தல’ அஜித்தே தான்.

அவரிடமிருந்து இப்படி தனிப்பட்ட முறையில் மிக்க கரிசனத்துடன் அட்வைஸ் பெற்றவர் முனீஷ் : ஒரு புதிதாக வளர்ந்து வரும் நடிகர். சினிமாவின் ஏணிப்படியில் கீழே நின்றுகொண்டு உயரங்களை அன்னாந்து மேலே பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர். கடும் முயற்சிகளுக்குப் பின் அஜித் உடன் நடிக்கும் வாயப்பு பெற்றிருக்கிறார் இவர். சமீபகாலமாக அஜீத் தன்னுடைய படங்களில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதைச் செய்துவருகிறார். சிவா இயக்கும் புதிய படத்தில் அஜீத்துடன் இணைந்து பாலா, வித்தார்த், சோகெய்ல் மற்றும் முனீஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

அஜீத் சாருடன் இணைந்து நடித்த போது சினிமா உலகம் என்ன என்பதை அறிந்து கொள்ள எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு நாள் அவரிடம் சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்கையில் சிரித்தபடியே அமைதியாக எனக்கு சினிமா உலகின் யதார்த்தங்களைப் பற்றியும் அதில் எப்படி நீந்திக் கரையேறலாம் என்பது பற்றியும் எளிமையாகச் சொல்லி விடைகொடுத்து அனுப்பினார் என்று அஜீத் பற்றி வியக்கிறார் முனீஷ்.