kalyana-samayal-sadham-press-news

நடிகை ஸ்நேகாவைக் கல்யாணம் செய்தபோது கூட ரசிகர்களுக்கு விருந்து தராத ப்ரசன்னா இப்போது லேகாவுடனான தனது திருமணத்திற்கு பெரும் விருந்து தருகிறார். ஸ்நேகாவை நினைத்து அடப்பாவமே என்று மனம் கலங்கி நிற்பவர்களுக்கு…. ப்ரசன்னா – லேகா வாஷிங்க்டன் நடிப்பில்  ‘கல்யாண சமையல் சாதம்’ என்னும் புதிய படத்தை அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஆனந்த் கோவிந்தன் –

அருண் வைத்யநாதன் தயாரிக்க, புதுமுக இயக்குனர் ஆர் எஸ் பிரசன்னா  இயக்குகிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி வரும் இத்திரைப்படம், பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம், இணையத்தின் மூலம் தேடப்படும் வரன்கள், திருமண ஏற்பாடுகளில் நடக்கும் கலாட்டாக்கள் என்று சுவை ததும்பும் காட்சிகளோடு, இக்கால இளைஞர்களை வசீகரிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆர்.எஸ். பிரசன்னா எல்.வி. பிரசாத் அகாடெமியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குனர் சிகரம் பாலசந்தரின் ஆகியோரிடம் தங்க விருது பெற்றவராவார். இவரது குறும்படங்களின் மூலம் பெர்லின்  மற்றும் பூசன் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றுள்ளார். விஸ்வரூபத்தில் ஆரோ 3டி எனும் புதிய தொழில் நுட்பத்தில் ஒலிச்சேர்க்கை செய்த குணால் ராஜன், கல்யாண சமையல் சாதத்தை அமெரிக்காவின் புகழ் பெற்ற வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் ஒலிச்சேர்க்கை செய்ய உள்ளார்.

அல்போன்ஸ் ராயிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி, பல இந்தி 3டி படங்களில் பணியாற்றிய கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். சத்யராஜ் படத்தொகுப்பை கவனிக்க, ஆறுச்சாமி கலையைக் கையாள்கிறார்.

இத்திரைப்படத்தில் அரோரா எனும் புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். இவர் பல புகழ் பெற்ற இசையமைப்பாளர்களிடமும், உலக இசை விழாக்களிலும் புல்லாங்குழல் வாசித்து பாராட்டுக்கள் பெற்றவர்.
ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இத்திரைப்படத்தில் இருந்து, ‘மெல்ல சிரித்தாய்’ எனும் ஒரு பாடலை மட்டும் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற பல பாடல்களை வாங்கிய திங்க் மியூசிக் நிறுவனம் கல்யாண சமையல் சாதத்தின் பாடல் உரிமையை வாங்கியுள்ளது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.