பாங்காக் போலாம் வர்றீயளா?

viswaroopam-part2-bangkok

பிரபல கம்பெனிகள் தங்கள் ஊழியர்களை குஷிப்படுத்தவும், கஸ்டமர்களை திருப்திப்படுத்தவும் பாங்காக்கிற்கு ஜாலி டூர்கள் அழைத்துச் செல்வார்கள். இப்போது பாங்காக்கை குத்தகை எடுத்திருப்பவர்கள் தமிழ் சினிமா குழுவினர். அமீரின் ஆதிபகவன் படத்தில் பெரும்பகுதி பாங்காக்கில் எடுக்கப்பட்டது.

அதற்குப் பின் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத், நயன்தாரா நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் பாங்காக்கில் நடத்தப்பட்டது. பின்னர் ஜீவா, ஆண்ட்ரியா, த்ரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

என்ன காரணம் என்று பார்த்தால் தமிழ்ப் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு பாங்காக்கில் ஸ்பெஷல் சலுகைகள் தரப்படுகின்றனவாம். அதனால் தான் பல தயாரிப்பாளர்கள் லொகேஷன் சேஞ்ச்சுடன் சலுகைகளையும் சேர்த்து கணக்குப் போட்டு பாங்காக்கிற்கு பறந்து வருகிறார்களாம்.

இப்படியாக பாங்காக்கை நோக்கி அடுத்து பறந்து செல்ல இருப்பவர் உலகநாயகனாம். விஸ்.ரூ – 2 க்காக பாங்காக்கில் ஏற்கனவே காட்சிகளை படமாக்கியுள்ள கமல் சமீபத்தில் தாய்லாந்து சென்று சில காட்சிகளை படமாக்கினார். தொடர்ந்து சில ஆக்ஷன் காட்சிகளை பாங்காக்கில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

பாங்காக்கில் என்ன பரலோகத்திலேயே அந்தப் படத்தை எடுத்தாலும் அதில் விஸ்.ரூ – 1 ல் அவர் கொட்டிய விஷத்தில் பாதியையாவது வெளியே கக்குவது நிச்சயம்.