யுவனின் அதிரடி ஆரம்பம்

aarambam-movie-songs-review

யுவனின் இசையில் அஜித்தின் ஆரம்பம் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. யுவன் வழக்கம் போல ஜமாய்த்திருக்கிறார். ஸ்டார் மதிப்புள்ள படம் என்பதால் பாட்டுக்கள் படம் வெளியானவுடன் ஹிட்டாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது. பாடல்கள் எதுவும் சொத்ப்பலில்லை. அதே சமயம் சூப்பர் ஹிட் என்றும் சொல்லிவிட முடியாது. படத்தின் எல்லா பாடல்களையும் பா.விஜய் எழுதியிருக்கிறார். வைரமுத்து போல கவித்துவம் மிக்க வரிகள் என்று சொல்லமுடியாவிட்டாலும் மோசமில்லை.

அடடா ஆரம்பமே
ரொம்ப நாளாக தமிழ்சினிமா பக்கமே வராதிருந்த சங்கர் மகாதேவனின் குரல் மீண்டும் புதிதாய் கேட்பது போலத் தெரிந்தாலும் கொஞ்சம் அழுத்தம் குறைந்து ஒலிக்கிறது. வட இந்திய பாங்க்ரா டப்பாங்குத்துப் பாடல் டைப்பில் இருக்கிறது. கேட்கலாம். இந்தப் பாட்டுக்கு அஜித்தைச் சுற்றி ஒரு 24பேர் டான்ஸ் ஆடும் காட்சியை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

என் ப்யூஸ் போச்சு
கார்த்திக் மற்றும் என்.எஸ்.கே ரம்யா பாடும் டூயட். ஏற்கனவே கேட்ட ட்யூன் தான். பா.விஜய் அதையா கேட்டேன். இதையா கேட்டேன் என்று எளிமையாக காதலன் கேட்கும் வரிகளில் பரவாயில்லை என்று சொல்லவைக்கிறார். கேட்கக்கூடிய மெலடிதான்.

ஹரே ராமா
தன்வி ஸா, சக்தி ஸ்ரீ கோபாலனின் குரலில் வரும் மெலடி. நன்றாக இருக்கிறது. சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த சுமாரான மெலடியையும் தன் கிறங்கடிக்கும் குரலில் சூப்பராக மாற்றிவிடுகிறார்.

மேலால வெடிக்குது
விஜய் யேசுதாஸ், ரஞ்சித், ஸ்வேதா மோகன் தாஸ் ஆகியோரின் குரலில் வரும் ஹீரோ அறிமுகப் பாடல் போன்ற பாடல். வாடா போடா என்று ஹீரோ தத்துவம் மற்றும் நட்பின் அருமை பெருமைகளை (ஓவராக) பேசும் பாடல். கொஞ்சம் வெஸ்டர்னாக போட்டிருக்கிறார் யுவன்.

ஸ்டைலிஷ் தமிழச்சி
மானசி, ரூபா பெண்ட், சைக்கோ யூனிட்(?) பாடும் பாடல்.அப்படியே அச்சு அசலாக ராப் பாடலாக இருக்கிறது. கவிதை வரிகளை கவனிக்க முடியவில்லை. மாடர்ன் (குடிகார) சென்னை தமிழச்சியை வரையறுக்கும் பாடல். ஹீரோயினை அறிமுகப்படுத்துவார்களோ இந்தப் பாட்டில் ?

மொத்தத்தில் ஆரம்பம் பாடல்கள் அஜித்தின் படத்துக்கு அதிரடி ஆரம்பமாக அமையலாம்.

–மருதுபாண்டி.