idharku-aasaip-balakumara-news

விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

மூஞ்சி குமாரு என்கிற காதலித்துக்கொண்டே இருக்கும் பாத்திரம் தான் விஜய் சேதுபதிக்கு. எவ்வளவு அவமானப்படுத்தினாலும் சிரித்தபடியே சென்றுவிடும் கேரக்டர். இதே போல சுமார் மூஞ்சி குமாரு என்கிற கேரக்டர். எவ்வளவு காதல் தோல்விகள் வந்தாலும் கலங்காமல் தொடர்ந்து காதலித்துக் கொண்டே இருக்கும் கேரக்டர். இப்படி வித்தியாசமான இரு கேரக்டர்களையும் பற்றியதுதான் இ.ஆ.பாலகுமாரா.

இவர்கள் இருக்கும் காலனியில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வரும் நந்திதா ஒரு கல்லூரி மாணவியாக நடிக்கிறார். அதே போல இதே காலனியில் அஸ்வினுக்குச் ஜோடியாக வரும் சுவாதி இன்னொரு புறம் . இவர்களின் இரண்டு காதல்கள் அதையொட்டிய நிகழ்வுகள் எல்லாம் சேர்த்து காமெடியாக கோகுல் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தை இயக்கியவர்.

இப்படத்தில் பரோட்டா சூரி ஒரு சீரியசான பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.