kamal-uthama-villain-news

விஸ்வரூபம் 2 முடிந்தவுடன் கமல் நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. லிங்குசாமியின் தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கும் (மறுபடியும் ப்ராக்ஸியா ? ஏன் கமல் சார்? ) படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார் கிரேஸி மோகன். எனவே இது ஒரு காமெடிப் படம் என்பது ஊர்ஜிதமாகிறது.

வரும் அக்டோபரில் ஷூட்டிங் துவங்க உள்ளது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் கால்ஷீட் கேட்கப்பட்டதாம். இப்போது அசினிடமும் கால்ஷீட் கேட்டிருக்கிறார்களாம். படத்தில் ஹோம்லி லுக் உள்ள கதாநாயகி வேண்டுமென்பதால் அசினை கேட்டிருக்கிறார்கள். அசின் ஏற்கனவே தசாவதாரத்தில் கமலுடன் நடித்துள்ளார்.

விஸ்வரூபம் 2 ஷூட்டிங்கில் கொடைக்கானலில் இருக்கும் கமல் விஸ்வரூபம் பின்தயாரிப்பு பணிகளை அக்டோபரில் முடித்து தீபாவளிக்கு விஸ்வரூபம் -2 வை வெளியிட இருக்கிறார். அது முடிந்ததும் விறுவிறுவென உத்தம வில்லனைத் தொடங்கி ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்துவிடுவார் என்கிறார்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.