pulivaal-oviya

மிகப் பணக்கார இளைஞன் ஒருவனும், மிக ஏழை ஒருவனும் விதிவசமாக ஒருவரையொருவர் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகிறது. பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த செல்போன் ஏழை இளைஞனுக்கு கிடைக்கிறது.

செல்போனில் பல ரகசியங்களை பதிந்து வைத்திருக்கும் பணக்கார இளைஞன் தேடிவந்து அதை மீட்டுவிடுகிறான். ஆனால் அந்த ரகசியங்களால் பின்னர் நடக்கும் விஷயங்களும், திருப்பங்களும் தான் காமெடி கலந்த ‘புலிவால்’ படத்தின் மீதிக் கதை. பிரசன்னா பணக்கார இளைஞனாகவும், விமல் ஏழையான இளைஞனாகவும் நடிக்கின்றனர். ஓவியாவும், அனன்யாவும் இவர்களுக்கு ஜோடிகளாக நடிக்கிறார்கள்.

‘கண்ணும் கண்ணும்’ படத்தை இயக்கிய மாரிமுத்து இப்படத்தை எழுதி இயக்குகிறார். மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன், ராதிகா சரத்குமாருடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.