மற்றுமொரு ஃபயர் படம்

un-per-solla-aasai-movie-news

தீபாமேத்தா என்கிற மேல்தட்டு பெண் இயக்குனர் இருந்தாரில்லையா? சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அவர் எடுத்த ஃபயர் என்கிற ஆங்கிலப்படம் பெண்ணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் உறவு பற்றியது. படம் வந்த காலத்தில் பெரும் பரபரப்பையும், இந்து மதவாதிகளின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்தது இந்தப் படம்.

இப்படத்தின் திரைக்கதையை அடிப்படியாகக் கொண்டு தமிழில் ப்ளான்ட் எண்டர்டெய்ன்மன்ட் நிறுவனம் ‘உன்பேர் சொல்ல ஆசை என்கிற படத்தை தயாரிக்கிறது. மஜி திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

“ஒவ்வொரு வாழ்க்கைக்கும் அர்த்தம் கொடுப்பதே உறவுகள்தான். ஒருவரின் ஆசைக்கும், அன்பு, கோபம், போன்ற எல்லாவற்றுக்கும் பாலமாயிருப்பது உறவுகளே, தவறான இடங்களில் ஏற்படும் உறவுகள் நம் வாழ்க்கையை சீர்குலைத்துவிடுகின்றன. அப்படிப்பட்ட தவறான முடிவுகளை அடையும் பாத்திரங்கள் வாழ்க்கையிலிருந்து புரிந்துகொள்வதென்ன? என்பது க்ளைமாக்ஸ்” என்கிறார் இயக்குனர் மஜி.

கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரான உறவுகள் எல்லா சமயங்களிலும் தனிமனித வாழ்க்கைக்கும் எதிரானது என்பதை மையக் கருத்தாகக் கொண்டிருக்கிறதாம் இந்தப் படம்.