கமலின் ‘த்ரிஷ்யம்’

drishyam-remake-meena

மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்து கடந்த ஆண்டு வெளியான த்ரிஷ்யம் என்கிற படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து அதை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்றன. தற்போது அதன் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க இருக்கிறார்.

தமிழில் கமலுக்கு ஜோடியாக யார் நடிப்பது என்கிற குழப்பம் இருந்தது. பல புதிய இளம் நடிகைகளை பரிசீலனை செய்தபின் கடைசியில் மலையாளத்தில் நடித்த மீனாவே தமிழில் கமலுக்கு ஜோடியாக நடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது. மலையாளத்தில் அவரது நடிப்பைப் பார்த்த கமலின் விருப்பமும் அதுவே.

இப்போது மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்துக்குப் பின் மீனாவுக்கு அவரது வயதையும் தாண்டி நிறைய மலையாள வாய்ப்புக்கள் வர ஆரம்பித்திருப்பதால் திருமணமான பின் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த பல நடிகைகள் நல்ல கதையம்சம் உள்ள படவாய்ப்புக்களை தேட ஆரம்பித்துள்ளனராம்.