‘இளம் நடிகைகளுடன் நோ டூயட்’ – அமீர்கான்

aamirkhan-no-act-news

தாரே ஜமீன் பர் போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள், சத்யமேவ ஜெயதே டி.வி. தொடர் என்று கலக்கி வரும் அமீர்கானுக்கு 49 வயதாகிறது. இந்த வயதிலும் பார்க்க யங்காகத்தான் தோற்றமளிக்கிறார். அதனால் இன்னும் இளம் நடிகைகளுக்குச் ஜோடியான இளம் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புக்கள்

வந்தபடியே இருக்கின்றன.

“என்னுடைய வயதுக்கு கதாநாயகனாக நடிப்பதே தவறு. அதிலும் இளம் நடிகைகளுக்கு ஜோடியாக நடிப்பது, கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, அவர்களுடன் ஆடிப்பாடுவது போன்றவற்றைச் செய்ய எனக்கே கூச்சமாக இருக்கிறது. ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்காக அதைத் தொடர்ந்து செய்ய எனக்கு விருப்பமில்லை. எனவே இனி இளம் நடிகைகளுடன் டூயட் பாடி ஆடி நடிக்கப் போவதில்லை என்று எனது 49 பிறந்தநாளில் முடிவு செய்துவிட்டேன்” என்கிறார் இந்த நிஜ ஹீரோ.

நம் ரஜினிகாந்த்துக்கு 62 வயதுக்கு மேலாகிவிட்டது. கமலுக்கு 55 வயதுக்கு மேலாகிவிட்டது. அமீர்கானுக்கு இருக்கும் நேர்மை இவர்களிடம் ஏன் இல்லை ?