alliraja-lyca-mobile

தமிழ் திரையுலகினர் எவ்வளவு அசால்ட்டாக ஈழமக்களையும், அவர்களுடைய பிரச்சனைகளையும் அனுகுகிறார்கள் என்பதற்கு புதிய உதாரணம் விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க ஆரம்பித்திருக்கும் ‘கத்தி’. சந்தோஷ் சிவன் ஈழ மக்கள் ஆதரவுப் படம்தான் என்று புளுகி லிங்குசாமி தயாரிக்க எடுத்த ‘இனம்’ படம் எவ்வளவு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, நயவஞ்சகமாக, கேவலமாக ஈழத்தமிழர்களையும் அவர்களது போரட்டத்தையும் சித்தரித்தது

என்பதைப் பார்த்து முடிவதற்குள் இந்தப் பிரச்சனை வநதிருக்கிறது.

படத்தில் என்ன பிரச்சனை? படத்தில் பிரச்சனை இருக்குமா இல்லையா தெரியாது. இதே வாழைப்பழ ஊசிகள் இருக்கலாம். படத்தை தயாரிப்பது லைக்கா மொபைல் நிறுவனத்தின் சுபாஷ் கரண் அல்லிராஜாவும், ஐங்கரன் நிறுவனமும். இந்த லைக்கா மொபைல், லைக்கா ப்ளை என்கிற குரூப் நிறுவனங்களளின் உரிமையாளரான அல்லிராஜா தமிழர் என்றாலும் ராஜபக்ஷேயின் நெருங்கிய நண்பர் (எட்டப்பன் வகையறா). ராஜபக்ஷேவின் பினாமிகளில் ஒருவர். இவரும் ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷேவும் ஈறும் பேனும் போல இணைபிரியா நண்பர்கள்.இந்த லைக்கா நிறுவனம் ஏற்கனவே ஈழப்படுகொலைகளை மறைக்க இலங்கை நடத்திய காமன்வெல்த் மாநாட்டின் முதன்மையான ஸ்பான்சராக இருந்தது.

இலங்கைக்கும் – லண்டனுக்குமிடையே விமான போக்குவரத்து தொழில் செய்துவரும் இந்த லைக்கா நிறுவனம் 2011ல் பிரிட்டனின் டோரி கட்சிக்கு 4 கோடி ரூபாய்களை அன்பளிப்பாக வழங்கியது. உடனே ஏன் ஒரு நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை அன்பளிப்பாக வழங்கவேண்டும் என்று கேள்விகள் எழுந்தவுடன் பிரிட்டன் பிரதமர் கேமரூன் இந்த நிறுவனத்தைக் கண்டித்து அதன் மேல் நடவடிக்கை எடுக்கவும் அது ஏதும் ஊழல் விவகாரங்களில் மாட்டியிருந்தால் அதை விசாரிக்கவும் உத்தரவு இட்டுவிட்டார்.

ஐ.நா.வரை வந்து பேசப்பட்டு நாறிய இந்த விஷயம் போன வருடம்தான் நடந்தது. அதற்குள் அதை கேள்வியே படாததுபோல ஐங்கரன் தயாரிப்பாளர்களும், ஏ.ஆர்.முருகதாஸூம் இதற்கும் ராஜபக்ஷேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பத்திரிக்கை அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பிரஸ்மீட்டில்  இன்னொரு விஷயமும் வெளியாகிப்போனது. ஏற்கனவே லைக்கா மொபைல்ஸ் தமிழப் படத் தயாரிப்பில் ரகசியமாய் ஈடுபட்டிருப்பது. அவர்களிடம் வெட்கமின்றி பணம் கைநீட்டி வாங்கியிருப்பவர்கள் ஆட்டோகிராப் சேரனும், கரு.பழனியப்பனுமே. பிரிவோம் சந்திப்போம் என்கிற சுமாரான படத்தைத் தான் லைக்கா மொபைல்ஸின் பணத்தில் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் பெயராக வேறொருவரின் பெயரைப் போட்டிருக்கிறார்கள் தமிழனுக்கு ஒன்றென்றால் ஒற்றைக்காலில் நிற்கும் சேரனும், பழனியப்பனும். முருகதாஸ், (மணிரத்னம்) போன்ற இந்திய நாட்டுப் பற்றை அள்ளி வீசும் இயக்குனர்களின் தமிழ்ப் பற்று இந்த லட்சணத்தில் இளிக்கிறது.

நல்லவேளை சர்வதேச தமிழ்ச் சமூகம் விழிப்பாய் இருந்து எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். இல்லாவிட்டால் நம்ம ஊர் தமிழர்கள் ‘லைக்கான்னா என்ன? ஒரு ஜூஸா ?’ என்று கேட்டுவிட்டுப் போயிருக்க தமிழ்ச் சினிமாவினுள் சிங்கள முதலாளிகள் நைசாக உள்ளே புகுந்திருப்பார்கள். .

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.