kadhal-paithiyam-news

புதுமுகங்கள் ஆதர்ஷ், ஜீவிகா நடிக்க உருவாகி வரும் புதிய படம் காதல் பைத்தியம். கன்னட சினிமாவின் பிரபல இயக்குனர் மாசந்துரு இப்படத்தை தமிழில் இயக்குகிறார். ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், பிரியா போன்றோர் நடிக்கின்றனர்.

திருமணத்துக்குப் பின் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்தாவது ஒரு பக்கம் பெருகிக் கொண்டே இருக்கிறது. இப்போது இன்னும் பொறுமையில்லாத தன்மையாக, காதல்களே சின்னச் சின்ன பிரச்சனைகளாலும், ஈகோக்களாலும் எளிதாக உடைந்து போகின்றன என்பதும் அதிகரித்துவரும் விஷயமாக இருக்கிறது.

காதல், அன்பு இவற்றையெல்லாம் தாண்டி வேறு ஏதோவொன்று காதலின் தேடுபொருளாக மாறிவிட்டிருக்கிறது. அதனாலேயே பிடிக்கும் வரை காதலி. பிடிக்கவில்லையா… கைகுலுக்கிப் பிரிந்துவிடு.. என்பதெல்லாம் இப்போது சகஜமாகி வருகிறது.

இதுபோன்ற காதலின் தற்காலத்திய பிரச்சனைகளைச் சொல்வதே காதல் பைத்தியத்தின் கதை என்கிறார் படத்தின் இயக்குனர்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.