அமெரிக்காவில் ரஹ்மான்

rahman-house-graffitti

ஏ.ஆர்.ரஹ்மான் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்திற்கு இசையமைத்து வருவது தெரிந்ததே. இப்படம் ஒரு விளைாட்டு வீரரின் வாழ்க்கையைப் பற்றியது. இப்போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தயாரிக்கும் ‘தி ஹன்ட்ரட் புட் ஜெர்னி’ என்கிற புதிய படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இதற்காக அமெரிக்காவில் தங்கியிருந்து இசையமைத்துவருகிறார் ரஹ்மான். அவர் தங்கியிருக்கும் வீட்டின் வாசலில் யாரோ கிறுக்கி வைத்திருக்கிறார்கள். இதுபற்றி போலீசுக்கு தெரிவிக்க எண்ணி பக்கத்து வீடுகளில் விசாரிக்கும்போது தான் தெரிந்தது அந்த வீடுகளிலும் யாரோ கிறுக்கிவைத்திருப்பதை. இது யாரோ சிறுவர்கள் விளையாட்டுக்காக செய்திருக்கலாம் என்று எண்ணி போலீசுக்கு தெரிவிக்காமல் விட்டுவிட்டார். இது  நம்ம ஊரில் விடலைப் பசங்கள் செய்யும் ரவுடித்தனமான செயல்களைப் போல அமெரிக்க விடலைகளின் செயல் தான். வேறு எதுவும் பயமுறுத்தலான விஷயம் இல்லை.

அந்தக் கிறுக்கல்களை படம்பிடித்து தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார் ரஹ்மான். “அமெரிக்கா என்றால் அங்கே எல்லாம் சரியாகத்தானிருக்கும் என்பது அர்த்தமில்லை. அங்கு பலர் நல்லவர்களாக உள்ளனர். துப்பாக்கி தூக்கித் திரிபவர்களும் இருக்கிறார்கள். மொத்தத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் உள்ள நாடாக இருக்கிறது அமெரிக்கா. ” – என்கிறார் ரஹ்மான்.

மற்ற நாடுகளில் வன்முறையைத் தூண்டியும், குழப்பங்களை ஏற்படுத்திவிடுவது பின்பு அவர்களை பாதுகாப்பது, புனரமைப்பது என்கிற பெயரில் அந்த நாட்டின் வளங்களை நைசாகச் அபகரித்து வளமாக வாழும் நாடு தான் அமெரிக்கா, என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே.