திரைக்கதாசிரியர் ஏ.ஆர்.ரஹ்மான்

ar-rahman-own-production-co

தனது இசையால் தமிழுக்கு உலகப் புகழ் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறார். இத்தனை வருடங்களில் தனது வாழ்க்கையில் உறுதுணையாக நின்றவர்கள், நம்பிக்கையானவர்களுக்கு நிர்வாகப் பிரிவுகளின் பொறுப்புக்களை அளித்துள்ளார்.

முதற்கட்டமாக ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தயாரிக்க இருக்கிறார். தனது இணையதளத்தில் இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

“எனது புதிய நிறுவனத்தில் முதல் தயாரிப்பாக ஹிந்தியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இதற்கான கதையை நானே எழுதியுள்ளேன். என் வாழ்க்கை அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், அவர்கள் புகட்டிய பாடங்கள் எல்லாம் இதில் இருக்கின்றன.

எனக்குள் உருவான பலகதைகளிலிருந்து இதை தேர்ந்தெடுத்திருக்கிறேன். புதுமுகங்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். முதல் படம் ஹிந்திப் படமாகி விட்டாலும் விரைவில் தமிழிலும் 2 படங்கள் தயாரிக்க இருக்கிறோம். தயாரிப்பாளராக ஆகியிருக்கிறேன். ஆனால் படம் இயக்கும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை” என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.