விஷாலின் நடிகர் சங்க அதிரடி

vishal-film-actors-asso-speech

விஷால் சினிமாவில் ஆக்ஷன்களில் அதிரடி செய்வதுபோலவே மேடைகளிலும் அதிரடியாகப் பேசிவிடுவார். நடிகர் சங்கத்தின் வரவு செலவு விஷயங்கள் பற்றிப் பேசியதிலிருந்து புதிய கட்டிடம் துவங்குவது பற்றி முன்னெடுத்ததுவரை எல்லாம் அதிரடிதான்.

சமீபத்தில் நடந்த நடிகர் சங்க கூட்டத்திலும் இதுபோலவே பரபரப்பாக பேசினார். “நிச்சயமாக நடிகர் சங்கத் தலைவர் பொறுப்புக்கு வரம் ஆசையில்லை எனக்கு. தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் இல்லை. நடிகர் சங்கம் என்றாலே சீனியர்கள் தான் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். இல்லை இளையதலைமுறைக்கும் இங்கே இடமுண்டு என்பதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக நான், கார்த்திக், ஜீவா மற்றும் ஆர்யா இணைந்து ஒரு படத்தில் நடித்து அதன் வருமானத்தைத் தர திட்டமிட்டுள்ளோம்” என்று பரப்பரப்பாக பேசிவிட்டார்.

இந்த திட்டம் நல்லாருக்கே என்று பலரும் பேச ஆரம்பிக்க ரஜினி, கமல், அஜித், விஜய் என்று சூப்பர் ஸ்டார்களும் களத்தில் வந்தால் எப்படியிருக்கும் என்றும் சிலர் அடுத்த கட்டத்தை நோக்கி பேச ஆரம்பித்திருக்கிறார்களாம்.