‘புள்ள படத்துல கேப்டனும் நடிக்கிறாராம்’ ‘தா.ப.நோ. ஓடுங்க’

மாண்புமிகு கேப்டனின் இளையவாரிசு சண்முகபாண்டியனார் ‘ சகாப்தம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாவது அனைவரும் அறிந்ததே.

கேப்டனே பல படங்களில் டபுள் ஹீரோயின்களோடு டமாக்கா பண்ணியவர் என்னும்போது, அவரது வாரிசு மட்டும் சிங்கிள் ஹீரோயினோடு டூயட் பாடமுடியுமா? எனவே சண்முகப்பாண்டியனாருக்கு, இதில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற நேகாவும், மிஸ் பெங்களூர் பட்டம் வென்ற  சுப்ரா ஐயப்பாவும் ஜோடிகளாக களமிறங்குகிறார்கள்.

படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து ரிலீஸ் மிகவும் பக்கத்தில் இருக்கிறது என்ற துக்கச்செய்தியை சொல்லிவிடலாம் என்று நினைத்தபோது, கேப்டன் வட்டாரத்திலிருந்து வந்த இன்னொரு செய்தி நம்மை தூக்கிவாரிப்போட்டது. அதாகப்பட்டது, பெத்த புள்ளக்கு கொஞ்சம் பூஸ்டாக இருக்கட்டுமே என்று கேப்டனும் சகாப்த்தத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறாராம். ‘இதை வெளிய சொன்னீங்க , தோளை உரிச்சுப்புடுவேன்’ என்று யூனிட் ஆட்களை மிரட்டிவைத்திருப்பதால் இதுவரை தகவல் கசியவில்லை.

இன்னும் என்ன பொறுமையா படிச்சிக்கிட்டு…. எல்லாரும் தாழ்வான பகுதிகளை நோக்கி ஓடுங்க..