’குற்றம் மறுத்தல்’- இப்படிக்கு பல்டி க்ரிஷ்டி

சிறந்த பிராந்தியப்படத்துக்கான தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளரை அதை இலவசமாக வாங்கி வெளியிடும் ஜே.எஸ்.கே. சதீஷ் அநியாயமாக இருட்டடிப்பு செய்து வந்தார்.
அதைப்பொறுக்கமாட்டாமல் க்ரிஸ்டி ஊடக நண்பர்கள் சிலரிடம் புலம்பவே, அது பரபரப்பான செய்தியானது.
அந்த அவமானம் பொறுக்கமாட்டாமல் சதிஷ் க்ரிஸ்டியிடம் மன்னிப்பு கேட்டு அனைத்து விளம்பரங்களிலும் அவர் பெயரையும் போட ஆரம்பித்தால் சமாதானமான கிரிஸ்டி ஊடக நண்பர்களுக்கு ஒரு பல்டி கடிதம் அனுப்பி உள்ளார். அது இதோ…
ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,
எனக்கும் என் நண்பரும் தயாரிப்பாளருமான திரு ஜே சதிஷ் குமாருக்கும் ‘குற்றம் கடிதல்’ தொடர்பாக மன கசப்பு என்று  வரும் செய்திகள் முற்றிலும் உன்மைக்கு புறம்பானவை.இந்த அறிக்கையே அந்தப் புரளியை நிராகரிக்க கோரி தான்.
‘குற்றம் கடிதல்’ படக் குழுவினர் சார்பாக நான் கூறுவது  என்னவென்றால்  ‘நாங்கள் எப்பொழுதுமே ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம் .தேசிய விருது விஷயத்தில் மட்டுமல்ல ,இந்தத் திரைப்படம் தொடர்பான எல்லா விஷயங்களிலும்  ஒருமித்த சிந்தனையில் தான் தயாரிப்பாளர்கள் ஆகிய நானும், திரு சதீஷ் அவர்களும்  செயல் படுகிறோம்.
‘குற்றம் கடிதல்’ படத்தின் உலக எதிர்மறை உரிமை  [ World Negative rights] வெளியீட்டு உரிமையை திரு ஜே  சதீஷ் குமார் வாங்கும் போதே, இந்த திரைப்படம் எந்தெந்த விருதுகளுக்கு அனுப்ப வேண்டும் , எந்த திரைப் பட விழாக்களில் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அந்த தெளிவும் , உறுதியும் , அதனுடன் அவருக்கு உள்ள அனுபவமும் எங்கள் படக் குழுவினருக்கு மிக பெரிய  வழிக் காட்டியாக இருந்தது என்றால் மிகை ஆகாது,இந்த கூட்டு முயற்சியே எங்களுக்கு இந்த அங்கீகாரத்தையும் , அந்தஸ்தையும் தந்தது என்பதே உண்மை.இதை மனதில் கொண்டு ஆதாரம் இல்லாமல் பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்பவும் வேண்டாம், பிரசுரிக்கவும் வேண்டாம் எனக்  கேட்டுக் கொள்கிறேன்.
பத்திரிகை நபர்களை நான் வேண்டிக் கேட்டு கொள்வது என்னவென்றால் ‘குற்றம் கடிதல்’ படத்துக்கு தாங்கள் நல்கி வரும் ஆதரவை பேராதரவாக மாற்ற வேண்டும். இதன் மூலம் எங்களைப் போன்ற தரமான படங்கள் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட
தயாரிப்பாளர்கள் பெருகுவார்கள். தரமான , சர்வதேச அளவில் போட்டியடக் கூடிய திரைப் படங்களை தயாரிக்கும் புதியத் தயாரிபாளர்களுக்கு உங்கள் ஆதரவே ஊக்கமும் உற்சாகமும் தரும்.
இப்படிக்கு உங்கள் பல்டி க்ரிஸ்டி.