அணு ஆயுதமா ? எங்க கிட்டே அமெரிக்கா பேசவேயில்லையே ! – பாகிஸ்தான்.

கடந்த வியாழனன்று வெள்ளை மாளிகை அதிகாரிகள், பாகிஸ்தானில் வளர்ந்து வரும் அணு ஆயுத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கான பேச்சுக்கள் தொடங்கி விட்டதாக தெரிவித்தனர். அதாவது, ரஷ்யாவுடனான பனிப்போர் காலக்கட்டத்தில் அமெரிக்கா மேற்கொண்ட ஒரு புலனாய்வு தொழில்நுட்பம் போன்ற ஒரு அமைப்பை பாகிஸ்தான் உருவாக்குவதாக எழுந்த செய்திகளை அடுத்து அமெரிக்கா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேசியதாகவும், அத்துடன் அணு ஆயுத ஒப்பந்தம் பற்றியும் பேசப்படப்போவதாகவும் தகவல்கள் வந்தன.

ஆனால் “அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் பற்றி எதுவும் பேசவுமில்லை, பாகிஸ்தானிடம் அமெரிக்கா எதையும் வலியுறுத்தவுமில்லை. எந்த ஒரு நாட்டின் வலியுறுத்தலையும் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஏற்றுக் கொண்டதில்லை என்பதற்கு வரலாறே சாட்சி” என்றார் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவாஸி கலிமுல்லா.

நேற்று இரவு அமெரிக்கா செல்லவிருந்த நவாஸ் ஷெரீப் கிளம்பாமல், நேற்று இரவு அமெரிக்காவிலிருந்து திரும்பிய ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு அதிகாரிகளை சந்தித்து அமெரிக்காவில் அவர்கள் அமெரிக்க அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தை பற்றிய விஷயங்களைக் கேட்டறிந்தார். இதையடுத்து அமெரிக்கா சொல்வது போல ‘அணு ஆயுதக் குறைப்பு பற்றி அமெரிக்கா எங்களிடம் பேசவேயில்லை’ என்கிறது பாகிஸ்தான்.

பேசினோம்னு சொல்லுது அமெரிக்கா. இல்லைன்னு சொல்லுது பாகிஸ்தான். ஆனா பாகிஸ்தான்ல இருந்து பாகிஸ்தான் உளவுத் துறைப் படைத் தலவர்கள் பேசிட்டு திரும்பி வர்றாங்க. பின்னே அப்படி என்னதான் அங்க போய் பேசினாங்க ? இந்தியாவில பருப்பு விலை ஏன் கூடுதுன்னா ?