அருள்நிதியை இயக்குகிறார் வசந்தபாலன்.

கருணாநிதியின் பேரன் அருள்நிதி பாண்டிராஜின் ‘வம்சம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர்.

மௌனகுருவில் ஒரு நல்ல நடிகராக பேசப்பட்ட அருள்நிதி ஆர்ப்பாட்டமில்லாமல் நடிகராக மிளிர முயற்சி செய்கிறார்.. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டிமாண்டி காலனி 2015 ன் வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது.

தற்போது இயக்குநர் அறிவழகனின் ‘ஆறாது சினம்’ என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அருள்நிதி. இப்படத்தைத் தொடர்ந்து வெயில் இயக்குநர் வசந்தபாலனின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். சரித்திரப் படங்களில் இறங்கியிருந்த வசந்தபாலன் தற்போது மீண்டும் சரித்திரமல்லாத படத்தை இயக்குவார் என்று கருதுகிறார்கள்..

பொங்கலுக்குப் பின் படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருக்கின்றன.