இளையராஜா இசையமைப்பில் வெளிவரவிருக்கும் 1௦௦௦ மாவது படம் தாரை தப்பட்டை. படத்தின் பாடல்கள் வெளியாகி அவரது பாடல்களுக்கு கிடைக்கும் வழக்கமான வரவேற்பைப் பெற்றன. அவருடைய இசை அனுபவம் இசையில் தெரிகிறது. ஆனால் தனது காலத்தைத் தாண்டிய புதியவர்களை ஈர்க்கும் ஒலிகள் குறைவாகவே இருக்கின்றன என்கிறார்கள்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தாரை தப்பட்டையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு விஷால் தான் காரணம் என்கிறார்களே? என்று பத்திரிக்கையாளர்கள் வழக்கம் போல சிண்டு முடிச்சுக் கேள்வி எழுப்பினர்.

இதில் கொஞ்சம் கடுப்பான வரலட்சுமி “யார் இந்த மாதிரி எல்லாம் சொல்றது? இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு சங்கீதா மேடம் தான் காரணம். இப்படம் நடனம் சம்பந்தப்பட்டது. ஏற்கெனவே வரலட்சுமி நடனம் பயின்று இருப்பதால் பேசலாம்னு இருக்கேன் என்று பாலா சார் சொல்லியிருக்கிறார். இதை சங்கீதா மேடம் என்னிடம் சொன்னார்கள். பாலா சாரை நான் போய் சந்தித்தபின் சுமார் 1 மாத காலம் இதற்காக நடன பயிற்சிகளை மேற்கொண்டேன். அதன்பிறகு கிடைத்த வாய்ப்பு தான் இந்த தாரை தப்பட்டை” என்று சற்று காட்டமாகவே பதிலளித்தார்.

ஜனவரி 14 ம் தேதி பொங்கலையொட்டி திரைக்கு வரவிருக்கும் தாரை தப்பட்டை படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிடுகிறது. பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டை பட்டையைக் கிளப்புமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Related Images: