ட்விட்டரில் கமல். குழப்ப வசனங்கள் இனி தினமும்..

முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரில் இளையராஜா இசையில் தேசிய கீதத்தைப் பாடி இன்று தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் கமல் ஹாசன்..

அவரது ட்விட்டர் ஐடி @ikamalhaasan.

இசைஞானி இளையராஜா இசையில் அவரே பாடிய தேசிய கீதத்தை அவர் தனது முதல் பதிவாக ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ட்விட்டரில் கதிகலக்கிக் கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன் அப்பாவை வரவேற்று ட்விட் செய்துள்ளார்.. இரவு 7.30 மணியளவில் கமல் ட்விட்டரில் இணைந்த அடுத்த மூன்று மணி நேரத்தில் 22 ஆயிரம் பேர் அவரைப் பின்தொடர்ந்துள்ளனர்.

இனி குழப்பியடிக்கும் கருத்துக்களுக்கும், வசனங்களுக்கும், பஞ்சாயத்துக்களுக்கும் பஞ்சமிருக்காது. என்ஜாய் பண்ணுங்க.