2013 ல் துவங்கி சவ்வாக இழுபட்டு ஒரு வழியாக வரும் 18ம் தேதி திரைக்கு வருகிறது மணிமாறன் இயக்கத்தில் ஜெய்,சுரபி நடிக்கும் புகழ்.

b2fbfdd8-55e4-4310-9b56-64c5d61f47e3இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் படம். சமகால இளைஞர்கள் சமுதாய தேவைகளை நோக்கி ஆர்வம் காட்டுவது  மற்றும் நீதியை அடையும்  வரை அயராது தங்கள் குரலை எழுப்புவது  போன்ற கதை ஓட்டத்துடன் காதல்,மகழ்ச்சி,அதிர்ஷ்டம் என சில பல மசாலா அயிட்டங்களைக் கலந்த கலவையாகவே ‘புகழ்’ இருக்கும் என்கிறார் மணிமாறன்.

படம் ஏன் இவ்வளவு தாமதானது என்று கேள்வி எழுப்பினால், ‘இது நாயகன் ஜெய்யிடம் கேட்கவேண்டிய கேள்வி. மார்க்கெட்டே இல்லாத நிலையிலும் அவர் தந்த டார்ச்சர்களை வைத்து அடுத்து ஒரு படம் இயக்கினால் அது சில்வர் ஜூப்ளி காண்பது உறுதி என்றும் அவர் புலம்பித்தள்ளுவதாக புகழ் வட்டாரங்கள் ஜெய்யைப் புகழ்ந்து தள்ளுகின்றன.

இன்னொரு பக்கம் நாயகி சுரபியும் ‘இவன் வேறமாதிரி’ எனும்படியாக நடந்துகொண்ட ஜெய் குறித்து மீடியாவில் குத்திக்குதறியெடுக்கக் காத்திருக்கிறாராம்.

Related Images: