நடிகர் சங்கத் தேர்தலில் தோற்றாலும் தோற்றார், சரத்தின் நிலை, ஆளாளுக்கு முட்டுச்சந்துக்குக் கொண்டுபோய்மூன்று நாளுக்கு நையப்புடைக்கும் கைப்புள்ளக்கும் கீழே என்று ஆகிவிட்டது.

கணக்கு கேட்டு தொடர்ந்து சரத்தை அவமானப்படுத்தி வந்த விஷால் கோஷ்டி, கமிஷனர் ஆபிஸ் போய் புகார் கொடுத்தும் பலன் இல்லை.

தற்போது லேட்டஸ்டாக அவரை நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்குவதா அல்லது நிரந்தரமாக அவர் ஒரு நடிகரே இல்லை என்று அறிவித்து விடுவதா என்ற குழப்ப விவாதம் நடந்து வருவதை ஒட்டி நேற்று சரத், வாகை சந்திரசேகர்,ராதாரவி ஆகிய மூவரும் தற்காலிகமாக நீக்கப்பட்டதாக செய்திகள் பரவின.

அந்தச்செய்தி தேவையான அளவு பரவி முடித்தவுடன், ‘இன்னும் அவங்க மூனு பேரையும் நடிகர் சங்கத்துல இருந்து தூக்கலை. ஆனா கணக்கு காட்டுறதுல இனியும் சுணக்கம் காட்டுனா அவங்கள நீக்குறதத் தவிர வேற வழி இல்லை’ என்று நாசர் அறிவித்திருக்கிறார்.

ஆக கூடிய சீக்கிரம் சித்தியின் ராடான் சீரியல்களில் சித்தப்பா வேடங்களில் மேற்படி மூவரையும் பார்க்கலாம்.

Related Images: