பழம்பெரும் நடிகையிடம் பழைய டெக்னிக் திருட்டு!

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயக நடிகர்களுடன் அந்த காலத்தில் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீ.

இவர் தனக்கு சொந்தமான நகைகளை தியாகராயநகர், பிரகாசம் தெருவில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருந்தார். நேற்று பகலில் அந்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்தார். வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டார். பின்னர் வங்கி வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி உட்கார்ந்தார். நகைகள் மற்றும் பணத்தை ஒரு பையில் போட்டு, காரின் பின் சீட்டில் வைத்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர், காருக்கு வெளியே கீழே கொஞ்சம் பத்து ரூபாய் நோட்டுக்களைப் போட்டுவிட்டு ராஜஸ்ரீயிடம் கீழே கிடக்கும் பத்து ரூபாய் நோட்டுக்கள் உங்களுடையதா ? என்று கேட்க, ராஜஸ்ரீயும், கார் கதவைத் திறந்து தனது ரூபாய்கள் தானோ என்று பத்து ரூபாய்களை எடுக்க ஆரம்பித்திருக்கிறார். பணத்தை எடுத்துவிட்டு திரும்பிப் பார்த்தால், நகையும் பணமும் இருந்த பையை அந்த நபர் அபேஸ் செய்துவிட்டுச் சென்றுவிட்டார்.
பழங்கால நடிகையிடம் இப்படிப் பழைய காலத்து டெக்னிக்கை வைத்து பணத்தைத் திருடிய பழையகாலத்துத் திருடனிடம் ஒரு கேள்வி,”ஏம்பா.. உனக்கு நூறு கோடி, ஆயிரம் கோடி வெச்சுருக்க ஆளுங்க எல்லாம் கண்ணுல தெரியாதா?  இல்லை  அந்த லெவல்ல ஏமாத்தற அளவுக்கு உனக்குத் திறமையில்லையா. ? இப்படி வயசான மனுஷங்கதான் கெடச்சாங்களா? வேஸ்ட்டுப்பா நீ.”