பக்கா ‘அட்ல்டஸ் ஒன்லி’ மனிதர் சிம்புவின் படம் ‘இது நம்ம ஆளு’ க்குத் தான் இந்த ஆச்சர்யம் நடந்துவிட்டது.   பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இப்படம், டி.ஆரின் சிம்பு சினி ஆர்ட்ஸ், வாலு படத்துக்கு செலவளித்த கோடிகளின் கடன்களால் வரும்.. ஆனா வராது என்கிற ஸ்டேஜிலேயே வருடக்கணக்காய் இருந்து வந்தது.
இந்நிலையில் படத்தை சென்சாருக்கு திரையிட்டு காட்டினர். படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கிவிட்டார்களாம் சென்சார் போர்டுக்காரர்கள். காரணம் பாண்டிராஜ் தான் என்பது பசங்க-2 பாண்டிராஜூக்கே தெரியும்.
பாண்டிராஜ் படத்தை பாண்டிராஜ் படமாகவே எடுக்க வாலுத்தம்பி சிம்பு அனுமதித்திருக்கிறார் போலும். அதனால் தான் அவருடைய அடாவடி டயலாக்குகள் போன்ற ‘பீப்’ விஷயங்கள் எதுவும் தலைநுழைக்காமல் படம் சென்சார் சான்றிதழ் வாங்கியிருக்கிறது.
 இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் வேறு எதுவும் பஞ்சாயத்துகள் புதிதாய் வராத பட்சத்தில் இது நம்ம ஆளு திரைக்கு வரும்.