ஒரு மகனுக்கோ, மகளுக்கோ மறைந்த தன் அம்மாவின் சாயலை தன் குழந்தைகள் முகத்தில் காணும் போது வெளிப்படும் அன்பு அலாதியானதும் ஆழமானதும் கூட.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஜபருனிஷா என்கிற பெண்ணை  சென்ற வருடம் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா – ஜபரூனிஷா தம்பதிக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை, பிரபல பாடகியும் யுவனின் தங்கையுமான பவதாரணி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.   சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த யுவன் சங்கர் ராஜாவின் அம்மா ஜீவாவுக்கும், யுவனின் மகள் பிறந்த ஏப்.7 தான் பிறந்தநாள்.

யுவனுக்கு, அம்மாவே மீண்டும் மகளாக..  வாழ்த்துக்கள்.

Related Images: