ரேட் டாக்கீஸ் தயாரிக்கும் “குகன்” என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அழகப்பன்.சி. இவர் தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற “வண்ணத்துப்பூச்சி” படத்தை இயக்கியவர்.

கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டர் ரகுராம், கலா குடும்பத்திலிருந்து அறிமுகமாகிறார் அரவிந்த் கலாதர். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தவே எடுக்கப்படும் படம் குகன். கலா மாஸ்ட் குடும்பம் என்பதால் நடனத்தில் அசத்தியுள்ளார். கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த நேத்ரா என்கிற சுஷ்மா அறிமுகமாகியுள்ளார். இவர்களின்  காதல் பின்னணியில் இயற்கை விவசாயத்தின் அவசியத்தை கதைக்களமாக சொல்லியுள்ளார் இயக்குனர்.

இதற்காகவே இயற்கை விவசாயத்தை தனது மூச்சாகக் கொண்டுள்ள திருநெல்வேலி ராஜா அய்யா அவர்களின் நூறு ஏக்கரில் அமைந்துள்ள இடத்திலும், இயற்கை சூழல் கொண்ட சிங்கத்தாகுறிச்சி என்ற இடத்திலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. மோகனப்பிரியா, ஒவியர் அரஸ் இருவரும் கதாநாயகனின் பெற்றோராக நடித்துள்ளனர். இதில் அரஸ் படத்திலும் ஒவியராகவே நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், பஞ்சு சுப்பு, சிங்கம் புலி போட்டி போட்டு நடித்துள்ளனர். மேலும் அருள்மணி, யுவான் சுவாங் நடிக்க புதுமுகங்களாக நால்வர் அறிமுகம் ஆகின்றனர்.

சிறப்பாக இன்றைய பெண்கள் எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் பழகலாம், அது இன்றைய நாகரிகம். அதை கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை எனும் புரட்சிகரமான(?) பெண்ணாக சிறப்புத் தோற்றத்தில் கல்லூரிப் பெண்னே நிஜமாக நடித்தது சிறப்பானது.

பழினிபாரதி, அண்ணாமலை, அழகப்பன்.சி ஆகியோர் பாடல்களை எழுத, கானா பாலா, அனந்து, ஸ்ரீஷா, ஸ்ரீநிஷா ஆகியோர் பாடல்களை பாட குருகல்யாண் இரட்டையர் இசையமைத்துள்ளனர். பி.அருண்செலவன் ஒளிப்பதிவாளராக, ஜெய்சங்கர் படத்தொகுப்பாளராக, சங்கர் மற்றும் ஸ்ரீதர் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக நிகில். லைன் புரடியூசர் – ர.குணசீலன்.

ஏப்ரல் 22க்கு திரைக்கு வருகிறது “குகன்”.   ஏம்ப்பா ! மெழுகுவர்த்தியைப் பிடிச்சுகிட்டு இப்படி கடிச்சுத் தின்றமாதிரி பாத்துகிட்டு நின்னுட்டிருந்தால் இயற்கை விவசாயம் எப்படி டெவலப்ஸ் ஆகும் ?

Related Images: