மடோனா செபாஸ்டின் நடிக்கும் ஆங்கிலப் படம்.

மடோனா செபாஸ்டின் ஆங்கிலப் படம் ஒன்றில் நடிக்கிறார். மலையாள இயக்குனர் சுமேஷ் லால் எடுக்கும் ஆங்கிலப் படம் இது. மலையாளத்திலும் வெளிவரும்.

ஒரு இயக்குனர் தனது வாழ்க்கையைத் தான் படமாக எடுக்கிறார் என்று தீவிரமாக நம்பும் ஒருவனது காதல் வாழ்வு பற்றியது இந்தப் படம். படத்தின் பெயர் “யாரோ ஒருவரின் மனிதர்கள்” (Humans of Someone ).

படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதோ அந்த டீஸர்.